“பேஸ் டிடெக்டர்..” நீட் ஆள்மாறாட்டத்தை தடுக்க நவீன தொழில்நுட்பம்! ஹைகோர்டில் சிபிஐ கொடுத்த ஐடியா
சென்னை: பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகளை கொண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை தடுக்கலாம் என்று சிபிஐ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.
நீட் தேர்வு ஆள்மாற்றத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறி கேரளாவை சேர்ந்த ரசீத் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ரசீத் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி மாணவர்கள் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிபிஐ பதில் மனு
என்னிடமும் விசாரணை நடத்தப்பட்டது. எனக்கு ஜாமீன் வழங்கிட உத்தரவிட வேண்டும்." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி நிர்மல் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது சிபிஐ பதில் மனுவை தாக்கல் செய்தது.

வீடியோ பதிவு
அந்த மனுவில், "நீட் தேர்வு நடைபெறும்போது தேர்வு மையங்கள் ஒவ்வொன்றிலும் வீடியோ பதிவு செய்திட வேண்டும். தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் மாணவரின் புகைப்படம் மற்றும் தேர்வு மைய அனுமதி சீட்டின் புகைப்படத்தை முறையாக சரிபார்க்க வேண்டும்.

பேஸ் டிடெக்டர்
கண்விழித்திரையை பதிவு செய்திட வேண்டும். அதேபோல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதும், தேர்வு மையத்தில் தேர்வு எழுத செல்லும்போதும், மருத்துவ கலந்தாய்வின்போதும் கைரேகை பதிவு செய்வதை முறைப்படுத்திட வேண்டும். அதேபோல் பேஸ் டிடெக்டர் கருவியை பயன்படுத்தி ஆள்மாறாட்டத்தை தடுக்கலாம்.

தேர்வு மைய எண்ணிக்கை
இதுபோன்ற நவீன கருவிகளையும் மென்பொருட்களையும் பயன்படுத்தி நீட் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கலாம். நீட் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து சோதனை நடைபெறும் முறைகளை எளிதாக்கி கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து தீர்ப்புக்காக நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications