ரயிலில் பயணிகளுக்கு இலவசமாகவே கிடைக்கும் வசதிகள்.. பலரும் அறியாத விஷயம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க
சென்னை: ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருத்தில் கொண்டு சில சேவைகளையும் இந்தியன் ரயில்வே பயணிகளுக்கு வழங்கி வருகிறது. இதில் சில சேவைகள் பயணிகளுக்கு இலவசமாகவே ரயிவே செய்து வருகிறது. ரயில் பயணிகள் பலரும் அறிந்திராத விஷயங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து அமைப்பாக ரயில்கள் உள்ளன. சென்னை, மும்பை போன்ற நகரங்களில் புறநகர் மின்சார ரயில்கள் குறுகிய தொலைவுக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல, தொலை தூர நகரங்களுக்கும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருந்தாலும் பயணிகள் முதலில் விரும்புவது ரயில் பயணத்தைதான். மலிவான கட்டணம், பாதுகாப்பான பயணம், டாய்லட் வசதி போன்றவை இருப்பதால் அனைத்து தரப்பு பயணிகளுமே விரும்பும் ஒரு பொதுப்போக்குவரத்தாக ரயில் போக்குவரத்துதான் உள்ளது.

பயணிகளுக்கு இலவசமாக கிடைக்கும் வசதிகள்
எந்த ஊருக்கு செல்ல வேண்டியிருந்தாலும் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா? என பார்த்துவிட்டுதான் அடுத்த விஷயத்தை பற்றி யோசிப்பார்கள். இப்படி இந்தியாவில் பயணிகளுடன் இரண்டறக்கலந்த ஒன்றாக ரயில் பயணம் உள்ளது. ரயில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில சேவைகளையும் ரயில்வே பயணிகளுக்கு வழங்கி வருகிறது. பலரும் அறிந்திராத இந்த விஷயங்களை பற்றித்தான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.
ரயிலில் ஏசி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு (bedroll) இலவசமாகவே கிடைக்கும். ஏசி 1, ஏசி 2, மற்றும் ஏசி 3 கிளாஸ் பயணிகளுக்கு படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவை இலவசமாகவே கிடைக்கும். எனினும், கரிப் ரத் எக்ஸ்பிரஸில், இந்த சேவைக்காக ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு வசதி வழங்கப்படுகிறது.
இலவச மருத்துவ உதவி
பயணிகள் ரயில் பயணத்தின் போது ஏதேனும் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் இலவச மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ளலாம். பயணிக்கும் போது உடல் நலன் சரியில்லை என பயணிகள் நினைத்தால் உடனடியாக ரயில் கண்காணிப்பாளர், டிக்கெட் பரிசோதகர் அல்லது ஏதாவது ஒரு ரயில்வே ஊழியரை தொடர்பு கொண்டு மருத்துவ உதவியை பெற முடியும்.
உணவு வசதி
வந்தே பாரத் போன்ற ரயில்களில் கட்டணத்துடன் உணவு வழங்கப்படுகிறது. அதேபோல சாதாரண விரைவு ரயில்களில் பயணித்தால் பயணிகள் வீட்டில் இருந்தே சாப்பட்டை கட்டிக்கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் ரயில்களில் உள்ள கேட்டரிங் சர்வீஸ் மற்றும் ஸ்டேஷன்களின் ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிடலாம். ஆனால் சில ரயில்களில் உணவு இலவசமாகவே கிடைக்கிறது.
ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி போன்ற பிரிமீயம் ரயில்களில் இலவச உணவு வழங்கப்படுகிறது. ஆனால் இதில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கிறது. இந்த ரயில்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஆனால் மட்டுமே இலவசமாக வழங்கப்படும்.
லாக்கர் வசதிகள்
அதேபோல சில முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான லாக்கர் வசதிகளும் உள்ளன. பெயரளவுக்கு இதில் கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகள் ரயிலுக்கு காத்திருக்கும் நேரத்தில் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். தொலை தூரங்களுக்கு செல்லும் போது இரண்டு ரயில்கள் மாற வேண்டும் என்றாலோ.. ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்றாலோ ரயில் நிலையங்களில் உள்ள வெயிட்டிங் ஹால்களை பயன்படுத்தி கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications