சொகுசு கார்களின் ராஜா; 5 கோடி ரூபாய் காரில் நஸ்ரியாவுடன் நச்சென்று வலம் வந்த ஃபஹத் ஃபாசில்
கேரளா: மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் 4.6 கோடி ரூபாய் விலையுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் G63 AMG luxury SUV காரை புதியதாக வாங்கி தன் ஆடம்பர வாழ்க்கையில் அந்தஸ்தின் அளவை மேலும் ஒரு படி உயர்த்தி காட்டி இருக்கிறார். அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் Most Wanted நடிகராக வலம் வருபவர் ஃபஹத் ஃபாசில் . வில்லன் பாத்திரமாக இருந்தாலும் உணர்ச்சிப்பூர்வமான கதாபாத்திரமாக இருந்தாலும் புகுந்து விளையாடுவதால் பாசில் பக்கத்தில் வரவே பலரும் பயப்படுகிறார்கள். ஆவேசம், மஞ்சும்மெல் பாய்ஸ் ஆகிய படங்கள் அவர் முத்திரையைப் பதித்த திரைப்படங்கள். சினிமா மீது தீராத தாகம் கொண்ட ஃபஹத் பாசில், நிஜ வாழ்க்கையில் ஒரு கார் பிரியர்.

வசதி என்று வந்துவிட்டால் வாசலில் வகை வகையாக 4 ஆடம்பர கார்களை வாங்கி நிறுத்துவதுதானே பெருமை. பாசிலிடம் நிறைய மாடல் கார்கள் இருக்கின்றன. பல ஆண்டுகளாகவே அவர் கார்களை வாங்கி சேமிப்பதை ஒரு ஹாபியாக வைத்திருக்கிறார். இந்தப் பட்டியலில் இப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கார் சேர்ந்துள்ளது. அதன் விலை சுமார் ரூ. 4.6 கோடி. அது என்ன கார்? மெர்சிடிஸ் பென்ஸ் G63 AMG luxury SUV தான். சமீபத்தில், அவரது மனைவி நஸ்ரியா, இந்த புதிய ஜி-வேகனை ஷோ ரூமில் இருந்து தங்களின் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு சென்றார்.

ஃபஹத் ஃபாசிலும் அவரது மனைவி நஸ்ரியாவும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகனை ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. அந்தப் பதிவு ஃபாசில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த வீடியோல் Automobili Ardent India இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
லம்போர்கினி உருஸ் டீலர்ஷிப் கடையிலிருந்து இருந்து கார் வெளியேறும் வழியில் அந்த ஜோடியை பின்தொடர்ந்து சென்று இதைப் படமாக்கியுள்ளனர். ஃபாசில் தனது SUV மாடல் G63 ஐ குறிக்கும் வகையில் வண்டிக்கு 6003 என்ற விஐபி எண்ணை வாங்கி பதிவும் செய்துள்ளார். இந்த ஜோடியிடம் முன்னதாகவே லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி கார் ஒன்றும் இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ்G63 AMG மாடல் காரை பொதுவாக அனைவரும் G-Wagen என்று அழைக்கப்படுகின்றனர். இன்றைய நவீன கார் விரும்பிகள் மத்தியில் இந்த மாடல் அதிகப்படியானவர்களின் தேர்வாக இருந்து வருகிறது. சொகுசை விரும்பும் பணக்காரர்கள் நிச்சயம் வீட்டில் இந்த SUV மாடல் காரை வாங்கி நிறுத்தி வைத்திருப்பார்கள். இதற்கு முன்னதாக, இந்த எஸ்யூவி ஹாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்தது. இருப்பினும், இந்தியாவில் புதிய தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியதன் மூலம், இது இந்தியப் பிரபலங்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் தேர்வாக மாறியுள்ளது
இதில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 9-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் மற்றும் 4MATIC AWD அமைப்புடன் வருகிறது.

ஃபஹத் ஃபாசில் தற்போது 992 ஜெனரேஷன் பைதான்-கிரீன் போர்ஷே 911 கரேரா எஸ் காரையும் வைத்திருக்கிறார். இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஜோடியாக 448 பிஎஸ் ஆற்றலையும் 530 என்எம் டார்க்கையும் கொண்டுள்ளது. 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு ஆறு சிலிண்டர் எஞ்சின் மூலம் இது இயங்குகிறது. அவரது சேகரிப்பில் இதற்கு முன்பாக மினி கூப்பர் கன்ட்ரிமேன், மெர்சிடிஸ் பென்ஸ் இ63 ஏஎம்ஜி ஆகியவை இருக்கின்றன. நடிகர் சினிமாவில் சம்பாதிக்கும் காசை எல்லாம் காருக்கு பெட்ரோல் போட்டே கரியாக்கிவிடுவார் போல. ஆல் இஸ் வெல் ப்ரோ!
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications