போலி ஆவணங்கள்.. மோசடி பத்திரங்கள் மூலம் வசமான நிலம்.. தூக்கிய போலீஸ்.. சென்னை ஆவடியில் அதிரடி
சென்னை: போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒருவர் சிக்கி உள்ளார்.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் என்பது மிகமிக அவசியமானது.. அதனால்தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரிகைபோலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்து வந்தது.
தமிழக அரசு: ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத்தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
போலி பத்திரத்தின் மூலம் ஏமாறுவதை தடுக்க அரசின் சார்பிலும் நடவடிக்கை எடுத்த பிறகும்கூட, இந்த மோசடிகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அதனால்தான், இதற்கும் அரசு ஒரு வழியை செய்திருக்கிறது.. அதன்படி, ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, http://ecview.tnreginet.net/ என்ற வசதியும் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது.
அரசின் இதுபோன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதோ இப்போதுகூட சென்னை ஆவடியில் ஒருவர் சிக்கி உள்ளார்.
ஆக்கிரமிப்பு நிலம்: முகப்பேர் கிழக்கு 2வது தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார் (எ) விஷ்ணுரூபன்... இவர் தனது ரூ.1 கோடி மதிப்பிலான 66 சென்ட் நிலத்தை ஏமாற்றி ஆக்கிரமித்து விட்டதாக கடந்த 20ம் தேதி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, நல்லூர் கிராமத்தில் 66 செண்ட் நிலத்தை ஞானபிரகாசம் என்பவரின் மனைவி பாக்கியம் என்பவரிடமிருத்து 2003ம் ஆண்டு ரெட்ஹில்ஸ் சார் - பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்று நான் அனுபவித்து வந்தேன். இந்த நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைத்து சிறிய வீட்டினை அமைத்து, விவசாயம் செய்து பராமரித்து வந்தேன்.
போலி ஆவணங்கள்: மேற்படி நிலத்திற்கு சம்மந்தமில்லாத, கிழக்கு தாம்பரம் வேங்கைவாயல் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர்உசேன் (48) என்பவர், எனக்குச் சொந்தமான இந்த இடத்துக்கு கிரையம் பெற்றதாக கூறி, ஒரு போலியான ஆவணத்தை காட்டி 21.10.2020ம் ஆண்டு அடியாட்களை வைத்து இடத்தை காலி செய்யுமாறு மிரட்டினார். இது சம்பந்தமாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.

நிலம் என்னுடையது என்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ள நிலையில், அதன்பின்னர் 22.6.21ல் மீண்டும் அத்துமீறி என் நிலத்தில் நுழைந்து பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பயிற்களை அழித்தும், என்னை தாக்கியும் ஜாகீர் உசேன் மிரட்டிவிட்டுச் சென்றார். எனவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து என் நிலத்தை எனக்கு மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
தூக்கிய போலீஸ்: இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர், துணை ஆணையர் பி.பெருமாள் தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆணையர் பொன் சங்கர், ஆய்வாளர் வள்ளி உள்ளிட்ட போலீசார் ஜாகீர்உசேனை பிடித்து விசாரணை நடத்தினர்.
நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன், அவர் போலி ஆவணங்கள் தயாரித்தது விசாரணையில் உறுதியானது. இறுதியில், ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications