சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரயில் டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா.. முதல்ல இதை பாருங்க.. சென்னையில் இப்படியும் மோசடி

Google Oneindia Tamil News

சென்னை: ரயில் டிக்கெட் புக் செய்யும்போது இனி ரொம்பவே பார்த்துதான் செய்ய வேண்டும் போல.. ஏனெனில் அதிலும் முறைகேடு வந்துள்ளது. அதுவும் சென்னையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.

Recommended Video

    ரயில் டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா.. முதல்ல இதை பாருங்க.. சென்னையில் இப்படியும் மோசடி - வீடியோ

    சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்புப் படை அதிகாரிகளுக்கு ரயில் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தொடர்பாக தென்னக ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே முதன்மை ஆணையர் செந்தில் குமரேசனுக்கு தகவல் வந்தது.

    Fake train ticket racket busted in Chennai

    இதையடுத்து, திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள மைக்ரை டிராவல்ஸ் என்ற தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

    இந்த அதிரடி சோதனையில் 15க்கும் மேற்பட்ட நபர்களுடைய முகவரியை வைத்து போலியான சுமார் 1500 இ- டிக்கெட்டுகள் இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய் இதனை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கள்ளச்சந்தையில் போலியான ரயில்வே இ - டிக்கெட்டுகளை விற்பரனை செய்தது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வினோதன் மற்றும் ஊழியர் ஹரிஹரன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவரிடமிருந்து 15000 போலியான இ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கணினி, இரண்டு செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

    இரண்டு குற்றவாளிகளையும் ரயில்வே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதங்களில் இது போன்று கள்ளச்சந்தையில் போலியான ரயில் இ -டிக்கெட்டுகள் விற்பனை செய்த நபர்கள் சுமார் 50 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போலியான ரயில்வேயை இ- டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Railway Protection Force (RPF) of the Chennai division on Friday busted a gang of touts involved in selling fake railway ticket.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X