‛‛பொய்ப்பரப்புரைகள் தோற்றோடும்’’.. காலை உணவு திட்டத்தை ஓவியமாக்கிய மாணவர்கள்.. நெகிழ்ந்த ஸ்டாலின்
சென்னை: காலை உணவு திட்டம் தொடர்பாக இன்று நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில் தான் காலை உணவு திட்டம் தொடர்பாக மாணவர்கள் வரைந்த ஓவியம் ட்விட்டரில் டிரெண்டான நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதனை பாராட்டி ‛பொய்ப்பரப்புரைகள் தோற்றோடும்'' என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

அதவாது தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி கடந்த 25ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஏராளமான குழந்தைகள் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பிரபல பத்திரிகை ஒன்றில் காலை உணவு திட்டத்தை விமர்சித்து இன்று செய்தி வெளியாகி இருந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்!
— M.K.Stalin (@mkstalin) August 31, 2023
அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.#CMBreakfastScheme https://t.co/a2y8SIAPZy
இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம் தொடர்பாக கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அதில் முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தபோது மாணவிக்கு ஊட்டி விடுவது போன்ற படம் கரும்பலகையில் வரையப்பட்டு இருந்தது. அதில் உண்டி கொடுத்தோர். உயிர் கொடுத்தோரே என எழுதப்பட்டு இருந்ததோடு, அதன் முன்பு ஒரு மாணவி, மாணவர்கள் நின்றனர்.
இந்த படம் வலைதளத்தில் இன்று வைரலான நிலையில் அதனை முதல்வர் ஸ்டாலின் பார்த்தார். இதையடுத்து அந்த போட்டோ அடங்கிய பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின், ‛‛இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும்! அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications