சென்னையில் லீசுக்கு குடிபோன குடும்பம்.. அடுத்த மாதமே வீடு ஜப்தி.. பறிபோனது 12.50 லட்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வீடு வாங்க முடியாத பலர், வாடகைப் பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை லீசுக்கு (குத்தகைக்கு) எடுக்கிறார்கள். ஆனால், லீசுக்குக் குடிபோகும் பலரும் பல்வேறு வகைகளில் ஏமாற்றப்படுகிறார்கள். முதலாவதாக, வீட்டைக் காலி செய்யும்போது உரிமையாளரால் குத்தகைப் பணத்தை உடனே திரும்பக் கொடுக்க முடிவதில்லை; வேறு யாராவது புதிய வாடகைதாரர் குடிவந்தால் மட்டுமே பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இரண்டாவது, லீசு வீடுகளில் பல அடிப்படை வசதிகளைக் கூட உரிமையாளர்கள் செய்து தருவதில்லை. மூன்றாவது பெரிய சிக்கல், லீசுக்கு விடப்பட்ட வீட்டின் மீது உரிமையாளர்கள் பெரிய அளவில் கடன் வாங்கியிருப்பார்கள் அல்லது ஜப்தி நோட்டீஸ் வந்திருக்கும். அதை மறைத்து மக்களை ஏமாற்றி விடுகிறார்கள்.

மடிப்பாக்கத்தில் அப்படித்தான் வீட்டைச் போலியாகக் குத்தகைக்கு விட்டு ரூ.12.50 லட்சம் மோசடி செய்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் குத்தகைக்கு வீடு தேடுபவர்கள் மூன்று முக்கிய விஷயங்களில் கண்டிப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்:

Family moves into rented home in Chennai on lease bank to seal the house next month

உரிமையாளர் விவரம்

நீங்கள் குத்தகைக்கு எடுக்கும் வீடு, உண்மையில் அதை உங்களுக்குக் குத்தகைக்கு விடும் நபரின் பெயரில்தான் உள்ளதா என்பதை வீட்டின் ஆவணங்கள் மூலமும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தும் உறுதி செய்ய வேண்டும்.

முந்தைய வாடகைதாரர்

அந்த வீட்டில் ஏற்கனவே குடியிருந்தவர்கள் என்ன காரணத்திற்காகக் காலி செய்தார்கள் என்பதை அக்கம் பக்கத்தில் விசாரிக்க வேண்டும். ஏனெனில், பழைய குத்தகைதாரருக்கே பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் உரிமையாளர் இருந்தால், உங்கள் அவசரக் காலத்தில் உங்களால் பணத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டை உடனடியாகக் காலி செய்ய முடியாது.

கடன் மற்றும் ஜப்தி நிலை

வீட்டின் மீது வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் கடன் உள்ளதா, நீதிமன்ற ஜப்தி நோட்டீஸ் ஏதேனும் வந்துள்ளதா மற்றும் உரிமையாளருக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் நிதிப் பலம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஏனெனில், புரோக்கர் என்ற பெயரில் வரும் சிலர் உண்மையை மறைத்து ஏமாற்ற வாய்ப்புள்ளது.

மடிப்பாக்கத்தில் நடந்த சம்பவம்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதாகும் முகமதுயூசுப் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சென்னையில் குத்தகைக்கு வீடு தேடியபோது, மடிப்பாக்கம் குபேரன் நகர் 10-வது தெருவில் வீடு குத்தகைக்கு இருப்பதை ஆன்லைன் செயலி மூலம் அறிந்துள்ளார். இதையடுத்து, வீட்டு உரிமையாளரான கொளத்தூரைச் சேர்ந்த 49 வயதாகும் ரமேஷ்குமார் என்பவரிடம் பேசி, ரூ.15 லட்சத்திற்குக் குத்தகை ஒப்பந்தம் செய்துள்ளார். பின்னர் இணையவழி பணப்பரிமாற்றம் மூலம் ரூ.14.50 லட்சம் செலுத்தி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்த வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 9-ஆம் தேதி வங்கி அதிகாரிகள் வீட்டிற்கு வந்து, ரமேஷ்குமார் வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாததால், நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை ஜப்தி செய்வதாகக் கூறி வீட்டைப் பூட்டி 'சீல்' வைத்தனர். இதையடுத்து முகமதுயூசுப், ரமேஷ்குமாரிடம் தனது குத்தகை பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளார். அவர் ரூ.2 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.12½ லட்சத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முகமதுயூசுப் மடிப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீடு கடனில் இருப்பதும், நீதிமன்ற உத்தரவுப்படி ஜப்தி செய்யப்படவிருப்பதும் தெரிந்திருந்தும், மோசடி செய்யும் நோக்கில் வீட்டைச் சட்டவிரோதமாகக் குத்தகைக்கு விட்டுப் பணம் பெற்றதாக ரமேஷ்குமார் மீது அதில் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சுரேந்திரன் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் ரத்தினகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட ரமேஷ்குமாரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+