குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை.. சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்பு!
சென்னை: கோடை விடுமுறையொட்டி, வரும் மே 1 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று 15 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் குடும்ப நல வழக்குகளை விசாரிப்பதற்காக 8 நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைப் பரிசீலித்த உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அலி இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் மே 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேவேளையில், அந்த காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications