நடிகை பபிதாவை ஞாபகம் இருக்கா.. "காய்த்த மரத்தில்தானே கல்லடி விழும்".. நயன்தாரான்னு சொன்னதுமே.. வாவ்
நயன்தாராவுக்கு நடிகை பபிதா தன்னுடைய முழு ஆதரவை தந்துள்ளார்
சென்னை: நயன்தாராவுக்கு பிரபல நடிகையும், அதிமுக பேச்சாளருமான பபிதா ஆதரவு தந்துள்ளார்.. வாடகை தாய் விவகாரம் குறித்து பபிதா பேசிய, சினிமா வட்டாரங்களின் கவனத்தையும் கவனிக்க வைத்து வருகிறது.
நடிகை பபிதாவை அந்தக் காலத்து சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. கவர்ச்சி வேடங்களில் புகுந்து விளையாடியவர். இவரது குடும்பமே நட்சத்திர குடும்பம்தான். இவரது அப்பா ஜஸ்டின், சண்டை நடிகர்..
மறைந்த எம்ஜிஆரின் மெய்க்காவலரும்கூட.. எம்ஜிஆருடன் பல படங்களில் இணைந்தும் நடித்துள்ளார். எம்ஜிஆரின் நிழல் போல வலம் வந்த ஜஸ்டினின் செல்ல மகள்தான் பபிதா. நீண்ட காலமாக அதிமுகவில் இருந்து வருகிறார் பபிதா. நட்சத்திர மேடைப் பேச்சாளராக வலம் வருபவர்..

பபிதா ஞாபகம் இருக்கா?
ஒருமுறை தேர்தலில் போட்டியிடவும் விருப்பம் தெரிவித்திருந்தார்.. இதை பற்றி பபிதா அப்போது சொல்லும்போது, "நான் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவள்.. 30 வருடமாக கட்சியில் இருக்கிறேன். நட்சத்திரப் பேச்சாளராகவும் இருந்து வருகிறேன். பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன்" என்றெல்லாம் கூறியிருந்தனர்.. அதேபோல கடந்த எம்பி தேர்தலின்போது, கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் மு. தம்பிதுரைக்காக இவர் வாக்கு சேகரித்தார்..

நடிகர் ஜஸ்டின்
அப்போது பிரச்சாரத்தில், "இத்தனை முறை ஆட்சியில் திமுக இருந்தும் ஏதாவது திட்டத்தை முறையாக செயல்படுத்தினாங்களா? திமுக ஆட்சிக்கு வந்தால் அவங்க குடும்பம் மட்டும் முன்னேறும். இதுவே அதிமுக ஆட்சி நீடித்தால் ஏழை எளியவர்கள் எல்லாரும் நன்றாக இருப்பார்கள்" என்று ரொம்ப நேரமாக பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் சுற்றி நின்றிருந்த பொதுமக்களுக்கு இந்த பெண் யார் என்பதுபோலதான் வெறிக்க வெறிக்க பபிதாவையே பார்த்து கொண்டிருந்தனர்.

சின்ன வீடு
இதை கவனித்த பபிதா, "நான் யார்னு தெரியுதாங்க.. பாக்யராஜ் படத்தில் சின்னவீடாக நடித்திருக்கிறேன். அங்க பாருங்க.. சின்ன வீடுன்னு சொன்ன உடனேயே ஒருத்தர் எப்படி சிரிக்கிறார்? ஐயோ.. நிஜ சின்ன வீடு இல்லீங்க.. படத்தில அப்படி நடிச்சிருப்பேன்" என்று பபிதா இயல்பாக பேசி மக்களிடம் ஓட்டுக்கேட்டது நினைவிருக்கலாம்.. இப்போது நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம் விஸ்வரூபமெடுக்கவும், இதற்கு தன் ஆதரவை முதல்நபராக தந்துள்ளார் பபிதா.

நடிகை பபிதா
ஒரு தனியார் சேனலுக்கு பபிதா பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது: நயன்தாராவை பொறுத்தவரை, ஒரு பெண் இவ்வளவு தூரம் தனியாகவே நின்றுபோராடி சாதித்து காட்டி உள்ளார்.. குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது என்றெல்லாம் இருக்காது.. நமக்குன்னு ஒரு வாரிசு வேண்டும் என்று அவர் நினைப்பதும் தவறு கிடையாது.. நான் கல்யாணம் ஆனதுமே இந்த சினிமா துறையை விட்டுவிட்டேன்.. ஆனால், நயன்தாரா அப்படி இல்லை.. அவர் என்ன சொல்கிறார் என்றால், என்றைக்குமே பெண்கள் வேலையையும், தன்னம்பிக்கையையும் விடக்கூடாது என்பதை சொல்வதுடன், அதை தன் சொந்த வாழ்க்கையில் பின்பற்றியும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

காய்த்த மரம்
கல்யாணம் ஆனதுமே செட்டில் ஆவது.. அப்பறம் நன்றாக சாப்பிடுவது.. வெயிட் போட்டுவிடுவது, பிறகு நடிக்க போகும்போது, நம்மை மற்றவர்கள் அசிங்கமாக இருப்பதாக சொல்லி கிண்டலடிப்பது இதெல்லாம் தேவையா? ஆனால், நயன்தாரை பொறுத்தவரை காய்த்த மரத்தில்தானே கல்லடி விழும்.. அந்த உயர்ந்த இடத்தில் நயன்தாரா இருப்பதால்தான், ஜனங்கள் இப்படி பல்வாறாக பேசுகிறார்கள்.... இதெல்லாம் ஒருநாள் அடங்கிவிடும்.. இப்படி ஒரு சட்டசிக்கலை யோசிக்காமல் நயன்தாரா செய்திருக்க வாய்ப்பே இல்லை..

ரோல்மாடல்
அவர் எல்லாம் சரியாகவே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.. அடிக்கடி என் பொண்ணுகிட்ட சொல்வேன், நயன்தாராவை ரோல்மாடலாக எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பேன்.. பெண்கள் தங்கள் உழைப்பால் உயர்ந்து, நாலு காசு சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு முதல் எடுத்துக்காட்டாக நயன்தாரா இருக்கிறார்.. அந்தவகையில் நயன்தாராவை எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும்" என்றார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications