கஸ்தூரி "அதை" சொன்னாரு பாருங்க.. "திமுக உபி ஆ-".. ஆவேசமாக புறப்பட்டு வந்த உடன்பிறப்புகள்.. என்னவாம்
சென்னை: கஸ்தூரி அந்த வார்த்தையை சொன்னதுமே, வழக்கம்போல் திமுகவினர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டுகொண்டிருக்கிறார்கள். இதனான் கஸ்தூரியின் ட்விட்டர் களமே அல்லோகல்லப்பட்டு கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து, பாஜகவை வீழ்த்தும் வியூகத்தை கையில் எடுத்து வருவதாக, கடந்த 2 வருட காலமாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. 2 வருடங்களுக்கு முன்பு, பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா பானர்ஜி களமிறங்கினார்..

சந்திரபாபு நாயுடு: ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும் இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கினார்கள்.. இதில் பெரிய பலன் அவ்வளவாக கிடைக்காத சூழலில், முதல்வர் ஸ்டாலின் களமிறங்கினார்.
"பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் தமிழக முதல்வர் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்று அன்றே அரசியல் நோக்கர்கள் கருத்து கூறினார்கள். திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..
பிரதமர் வேட்பாளர்: மேலும், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பதிலும் ஸ்டாலின், உறுதியாக உள்ளார் என்றாலும், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரசேகர ராவ், மம்தா போன்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று உறுதியாக தெரியவில்லை..
இப்படிப்பட்ட சூழலில்தான், பெங்களூரில் எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை.. முதலிவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா என பலரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முக்கிய எதிர்க்கட்சிகள் பங்கேற்ற, இந்த கூட்டணிக்கு I-N-D-I-A (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது, Indian National Developmental Inclusive Alliance - INDIA இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி என எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
புதிய பெயர்: "இந்தியா" என்ற பெயரே மோடிக்கு எதிராக நிறுத்தப்பட்ட பெயராகவும் சலசலக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக தரப்பு கடுப்பாகி உள்ளதாக சொல்கிறார்கள்.
கடந்த முறை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) என்று பெயருள்ள நிலையில், இந்த பெயருக்கு பதிலாக புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.. வழக்கம்போல திமுகவை சீண்டி ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்.
INDIA - the name is excellent.
— Kasturi (@KasthuriShankar) July 18, 2023
( But INDIA cannot compete or be complete without Andhra, Telangana,Odisha leaders...)
INDIA vs NDA ... Bring it on !
அப்புறம் திமுகவினரை இனி உபி ஆ (UPA )என்று யாரும் கேட்க முடியாது. இனி இந்தி யா? 🤭 pic.twitter.com/xN6guvYzfy
கஸ்தூரி: இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், "இந்தியா - பெயர் சிறப்பாக உள்ளது. (ஆனால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா தலைவர்கள் இல்லாமல் இந்தியா போட்டியிடவோ அல்லது முழுமையாக இருக்கவோ முடியாது) இந்தியா vs NDA ... கொண்டு வாருங்கள்! என்று பதிவிட்டுள்ள கஸ்தூரி, "அப்புறம் திமுகவினரை இனி உபி ஆ (UPA )என்று யாராலும் கேட்க முடியாது. இனி இந்தி யா?" என்றும் குறிப்பிட்டு நக்கலடித்துள்ளார்..
அத்துடன், கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் போட்டோவையும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்புமான கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.. கஸ்தூரி பதிவிட்டிருந்த போட்டோவில் மேல்வரிசை மற்றும் கீழ்வரிசை இரண்டிலுமே ஸ்டாலினின் போட்டோ அச்சிடப்பட்டிருந்ததை வைத்து ட்விட்டர்வாசிகள் கிண்டலடித்திருந்தனர்.
கவனிச்சீங்களா: "மேடம் கவனிச்சிங்களா? முதல் வரிசையிலும் ஸ்டாலின் போட்டோ இருக்கும் இரண்டாவது வரிசையிலும் ஸ்டாலின் போட்டோ இருக்கும் தலைவர்கள் கிடைக்கவில்லை என்று போட்டோக்கள் போடப்பட்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளனர். மேலும் பலரோ, கஸ்தூரிக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
வாழ்த்துக்கள்: "பாரத் பாரத்னு சொல்ற உங்க வாயால இந்தியான்னு சொல்ல வெச்சிட்டோமே. இனி இந்தியா ஒழிக, இந்தியாவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு சொல்ல முடியுமா? இந்தியா எப்போதும் இந்தியா தான்.. வேற்றுமையில் ஒற்றுமை.. அது என்றைக்கும் பிரிவினைவாத பாரதமா மாறாது. இருந்தாலும் முயற்சித்து பாருங்கள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். அதிலும், சற்று காட்டத்துடனேயே பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள் "உடன்பிறப்புகள்".
-
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு












Click it and Unblock the Notifications