"காண்டம்".. ஷர்மிளா நிஜமான டாக்டரா.. வெட்கக்கேடான "திராவிடம்".. வரிந்து கட்டி வந்த கஸ்தூரி.. அடடே
டாக்டர் ஷர்மிளாவை நடிகை கஸ்தூரி சரமாரியாக ட்வீட் போட்டு விமர்சித்துள்ளார்
சென்னை: டாக்டர் ஷர்மிளா ஒரு ட்வீட் போட்டு மறைமுகமாக கஸ்தூரியை தாக்கினால், பதில் ட்வீட் போட்டு, நேரடியாகவே ஷர்மிளாவை அட்டாக் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்த பேச்சுக்கு திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. மேடையில் திமுக அமைச்சர், மற்றும் மூத்த நிர்வாகிகளை வைத்துக்கொண்டே இப்படி மோசமாக பேசியிருந்தது பலரையும் முகம் சுழிக்க வைத்தது.

கலைஞர்
இந்த வீடியோவும் வைரலானது.. இதையடுத்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார் குஷ்பு.. "ஆண்கள் பெண்களை தவறாக பேசுவது அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தை காட்டுகிறது அவர்கள் வளர்ந்த மோசமான சூழலை காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இதுதான் புதிய திராவிட மாடலா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் அந்த ட்வீட்டை கனிமொழி எம்பிக்கும் டேக் செய்திருந்தார்.

கனிமொழி
இதற்கு கனிமொழி பதிலளித்திருந்தார்.. பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை சகித்துக்கொள்ளவே முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். எனது தலைவர் ஸ்டாலினும், எனது கட்சியினரும் இதை மன்னிக்கவே மாட்டார்கள் என்பதால் என்னால் வெளிப்படையாக இதற்கு மன்னிப்பு கேட்க முடிகிறது என்று கனிமொழி பதிவிட்டிருந்தார்.

#திராவிடியபசங்க
இதற்கு உடனடியாக குஷ்பு நன்றி தெரிவித்திருந்தார்.. "உங்களது நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன் எனவும் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கிறீர்கள் எனவும் பதிவிட்டார்.. இந்த இரு பெண்களின் நேர்மையான அணுகுமுறையும், ஒருவரையொருவர், நாகரீக பாணியில் பதிலளித்த விதமும், மக்களை கவனிக்க வைத்து வருகின்றன.. ஈர்த்தும் வருகின்றன.

Dr ஷர்மிளா
இந்த நிகழ்வினையொட்டி டாக்டர் ஷர்மிளா ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "அந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்கப்பட வேண்டியது மேடம். இருப்பினும், நீங்கள் தொடங்கி வைத்த #திராவிடிய_பசங்க என்ற ஹேஷ்டேகை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். அந்த டேக்கை சங்கி குழு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தொடங்கப்பட்ட #திராவிடிய_பசங்க என்ற ஹேஷ்டேக்கில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நீங்களும் அதை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்'' என்று மறைமுகமாக கஸ்தூரியை சாடினார். ஆனால், கஸ்தூரியோ, நேரடியாகவே இதற்கு ஷர்மிளாவுக்கு பதிலடி தந்துள்ளார்..

Condom + டாக்டர் ஷர்மிளா
அதில் ஷர்மிளாவை தாக்கியும் பதிவிட்டார்.. ''மன்னித்தல் என்பது ஏற்றுக்கொள்வதும் ஊக்குவிப்பதும் ஆகும். கண்டனம் என்றால் எதிர்ப்பு என்று பொருள். தேங்க் காட், கடவுளுக்கு நன்றி, இவர் காண்டம் (Condom) என்று எழுதவில்லை. அவர் (ஷர்மிளா) உண்மையான டாக்டரா அல்லது வசூல்ராஜா மாதிரியான திராவிட மாடலா? எதுவாக இருந்தாலும், திராவிடம் என்பது வெட்கக்கேடான கருத்து என்பதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி'' என்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.. இதற்கு ஷர்மிளா தரப்பில் ரிப்ளைகள் பறந்து கொண்டிருக்கின்றன.. ஆக, குஷ்பு + கனிமொழியின் ட்வீட்களை கடந்து, இந்த 2 பெண்களின் பஞ்சாயத்து பதிவுகள்தான் ட்விட்டரையே அல்லோகல்லப்படுத்தி கொண்டிருக்கின்றன.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications