பிரபல நடிகை "இங்கே" வருகிறாராமே.. பாஜகவே எதிர்பார்க்கலை.. மாஸ்டர் ப்ளானே இதான்.. ஆனா ஒரு கண்டிஷன்..!
காங்கிரஸ் கட்சியில் இணைய போகிறார் திரிஷா என்று ஒரு தகவல் வட்டமடிக்கிறது
சென்னை: ஒரு பிரபல நடிகையை, கட்சிக்குள் கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார்களாம்.. இதுதான் தற்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடந்த கால காங்கிரஸ் அரசியலில், வேறு எந்த பெண் பிரமுகர்களும் குஷ்பு அளவுக்கு ஆக்டிவ்வாக இருந்தது கிடையாது என்பது மறுக்க முடியாது உண்மை.
அதேசமயம், தொய்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் காங்கிரஸை பற்றி அப்போதே நிறையவே கவலைப்பட்டார் குஷ்பு.. அதிலும் ராகுல்காந்தியின் மெத்தனபோக்கை நினைத்து, பலமுறை வெளிப்படையாகவே விமர்சித்தார் குஷ்பு..

காலி காங்கிரஸ்
இதைவிட முக்கியமாக, கட்சியில் சேர்ந்து பல வருடங்கள் ஆனபோதிலும், தனக்கு வேறு முக்கிய பதவி எதுவும் தரப்படாதது குஷ்புவை அதிகம் கவலைக்கொள்ள செய்தது.. தேர்தலும் பலமுறை சீட் கேட்டும் அதையும் மேலிடம் தராததால், வெறும் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததால், கடுப்பான குஷ்பு, பாஜகவுக்கு தாவ நேர்ந்தது என்றார்கள்.. இப்போது குஷ்புக்கு பிறகு, அந்த இடம் காங்கிரஸில் காலியாகவே உள்ளது.. இந்நிலையில்தான், சமீபகாலமாகவே, த்ரிஷா தமிழக அரசியலுக்கு வரப்போவதாக ஒரு பேச்சு கிளம்பியது..

பிரபல நடிகைகள்
பிரபல நடிகைகள் என்றாலே, எப்படியும் பாஜக பக்கம்தான் சாய்வார்கள் என்கிற கணிப்பு பலமாக உள்ளது.. காரணம், கவர்ச்சி அரசியலை பெரிதும் நம்பும் கட்சி பாஜக என்பதை வடமாநில தேர்தல்களே நிரூபித்துள்ளன.. வடமாநிலங்களை எடுத்துக் கொண்டால், டிக்டாக் பிரபலம் உட்பட அனைவருக்குமே தேர்தலில் சீட்டை தருவது பாஜகவின் வழக்கம்.. அதிலும் தேர்தல் பிரச்சாரங்களிலும் நடிகர், நடிகைகளின் பங்கு அதிக அளவு வெளிப்படும். அந்தவகையில் திரிஷா அரசியலில் கால்வைக்கபோகிறார் என்ற தகவல் கசிந்ததும், எப்படியும் பாஜக பக்கம்தான் செல்ல வாய்ப்புள்ளது என்று முணுமுணுக்கப்பட்டது.. ஆனால், திடீரென காங்கிரஸ் பக்கம் அவர் வரப்போவதாக செய்திகள் வெளியாகி வியப்பை தந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
குஷ்புக்கு பதிலாக, இழந்த புத்துணர்ச்சியை திரிஷாவை வைத்து மீட்டு கொண்டு வந்துவிடலாம் என்று கதர் கட்சி கணக்கு போடுவதாகவே தெரிகிறது.. இப்படி ஒரு யூகம் 3 மாதங்களுக்கு முன்பு வட்டமடித்தபோது, மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஒரு பிரபல நாளிதழுக்கு இதுதொடர்பாக பேட்டி தந்தார்.. அதில், "யார் யாரோ த்ரிஷா காங்கிரஸில் சேர போகிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் எங்கள் கட்சியில் அப்படியொரு பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை...

நிஜம் நிழல்
இந்தத் தகவல் உண்மையா என்றும் தெரியாது. ஆனால், த்ரிஷா வருவதால் காங்கிரஸ் கட்சிக்கு பயனோ பலமோ உண்டாகும் என்று நான் நினைக்கவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியாது. த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால் பெரிய தாக்கமும் ஏற்படாது. காங்கிரஸ் மதசார்பற்றக் கட்சி. அனைவரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்ற கட்சி.. அதனால், மதசார்பின்மையையும் காங்கிரஸ் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு த்ரிஷா வந்தால் வரவேற்போம். இக்கொள்கைகளுடன் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்" என்று கூறியிருந்தார்.. ஈவிகேஎஸ் சொன்ன இந்த கருத்து, த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

மேஜர் ரோல்
இப்படி பல தகவல்கள் திரிஷா பற்றி வந்தநிலையில், திடீரென அந்த பேச்சு அமுங்கிவிட்டது.. யாருமே அதை பற்றி பேசவில்லை. எந்த தகவலும் வரவில்லை.. இப்போது 3 மாதம் கழித்து மீண்டும் கசிய தொடங்கிஉள்ளது.. பொன்னியின் செல்வன் படத்தில் மிக மிக முக்கியமான ரோலில் திரிஷா நடித்திருந்த நிலையில், பெரிய அளவிலான வாய்ப்புகள் தன்னை தேடி வரும் என்று நினைத்தாராம்.. ஆனால், அப்படி எதுவுமே வராதது சற்று வருத்தம் தந்துள்ளதாக தெரிகிறது..

ஈவிகேஎஸ்
இதனிடையே, மீண்டும் கட்சி சார்பில், திரிஷாவுக்கு தூது விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆனால், தனக்கு ராஜ்ய சபா எம்பி., பதவி தந்தால், லோக்சபா தேர்தலில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் பிரச்சார பீரங்கியா வலம் வருகிறேன் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம் திரிஷா.. இது உண்மையா என தெரியவில்லை.. ஒருவேளை நிஜமாயின், திரிஷாவின் இந்த கண்டிஷனை காங்கிரஸ் ஏற்குமா? என தெரியவ்லலை..

நிழலும் நிஜமும்
இதனிடையே இன்னொரு செய்தியையும் இங்கு நினைவுகூரவேண்டி உள்ளது.. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நடிகை த்ரிஷா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக அரசியலில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகியிருந்தது.. எல்லா மீடியாக்களிலுமே இந்த செய்தியை பரபரப்பாக வெளியிட்டார்கள்.. த்ரிஷா ரசிகர்கள் உட்பட பலருக்குமே இந்த செய்தி, ஆச்சரியத்தை கிளப்பிவிட்டது.. ஆனால் இதனை த்ரிஷாவின் அம்மா உமா, அப்போதே திட்டவட்டமாக மறுத்திருந்தார்.. ஏற்கனவே திரிஷா தரப்பில் மறுப்பு வெளியிட்ட நிலையிலும்கூட, இப்போது மீண்டும் இதே பேச்சு கிளம்பி உள்ளது.

புத்துணர்ச்சி பிளான்
ஆனால், த்ரிஷாவை கட்சியில் இணைத்து பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி, புத்துணர்ச்சியை ஏற்படுத்த பிளான் இருக்குமானால், அது ஓரளவு ஒர்க் அவுட் ஆகும் என்கிறார்கள்.. ஆனால் யாராக இருந்தாலும் சரி, சினிமாத்துறையை சேர்ந்தவர்களே என்றாலும் சரி, அது பிரபலமானவர்களே என்றாலும் சரி, கட்சிக்கு பலம் என்பது அவர்கள் சேர்வதால் மட்டுமே கிடையாது.. கட்சிக்காக செயலாற்றுவதை பொறுத்துதான் அமையும் என்று ஈவிகேஎஸ் ஒருமுறை சொல்லியிருந்தது, மறுக்க முடியாத யதார்த்தம்..!!
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications