பிரபல நடிகை விஜயலட்சுமி சுளீர்.. "சீமான் என் மூச்சு - சீமானை லவ் பண்றேன்".. இதுல திமுக வேற.. நிஜமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விஜயலட்சுமி பேசியதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அதில், திமுகவினரை விஜயலட்சுமி கடுமையாக சாடியுள்ளார்.. சீமான் விஷயத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றும் ஆவேசமாக பேசி சீமானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்றாலும், வீடியோவில் பேசுவது விஜயலட்சுமியா? என்றும் சந்தேகத்தை கிளப்பி உள்ளனர்.. இப்படி 2 விதமான கருத்துக்கள் சோஷியல்மீடியாவில் எழுந்து வருகிறது.

நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு முன்பேயே, சீமான் தம்முடன் குடும்பம் நடத்தினார் என்று விடாமல் சொல்லி வந்தவர் விஜயலட்சுமி.. இதுதான் அவரது புகார்...

Famous Actress vijayalakshmi supports seeman and what happened actually

பாலியல் தொல்லை: பாலியல் ரீதியாக தம்மை பயன்படுத்திவிட்டு சீமான் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார், தனக்கு துரோகம் செய்துவிட்டார் இதுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கண்ணீருடன் புலம்பி வந்தவர்.. அத்துடன் சீமானுடன் இருக்கும் சில போட்டோக்ள, சீமான் தொடர்பான வீடியோக்களையும் விஜயலட்சுமி சோஷியல் மீடியாவில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார்.. மற்றொருபக்கம் போலீசிலும் சீமான் மீது விஜயலட்சுமி புகார் தந்திருந்தார்.

இதையடுத்து, விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் சரமாரி விமர்சித்து வருகிறார்கள்.. ஒருமுறை அக்கட்சியின் காளியம்மாள்கூட, மேடையில் விஜயலட்சுமியை தாக்கி பேசியிருந்தார். இதற்கு உடனடியாக இன்னொரு வீடியோவை பதிவிட்டு ரியாக்ட் செய்திருந்தார் விஜயலட்சுமி..

காளியம்மாள் : "காளியம்மாள் எல்லாம் எனக்கு செருப்பு.. இந்த மாதிரி எத்தனை செருப்பை நான் மிதிச்சிட்டு, போட்டுட்டு போகணும்னு தெரிஞ்சுதானே வந்திருப்பேன்.. என்ன, பூச்சாண்டி காட்டிறீங்களா? காளியம்மாள் எல்லாம் பேசவேக்கூடாது, அவ காளின்னா, நான் அவளுக்கு ஆத்தா.. எனக்கு இந்த மாதிரி சில்லறை ஆட்களோட கலாட்டா தேவையில்லை.. நிறுத்திக்குங்க எல்லாத்தையும்" என்று நடிகை விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஒருகட்டத்தில் திமுக அரசிடமும் சீமான் குறித்த புகாரை கொண்டு சென்றார் விஜயலட்சுமி.. இதுகுறித்து முதல்வரிடமும் கோரிக்கை வைத்து, வீடியோ வெளியிட்டிருந்தார்.

கர்த்தரின் மறுபிறவி: அதில், "கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும்" என்று நடிகை விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இப்படி சீமானை தொடர்ந்து விமர்சித்து வந்த விஜயலட்சுமி, தற்போது சீமானுக்கு ஆதரவாக பேசியிருப்பதுபோல ஒரு வீடியோ வெளியாகி உள்ளது, மிகுந்த பரபரப்பை கிளப்பி உள்ளது.. அந்த வீடியோவில் திமுகவினருக்கும் பதிலடி தந்திருக்கிறார்.

களங்கம்: "சீமானை கைது செய்யவும், அவர் பெயரை களங்கப்படுத்தவும் தான் என்னை ஒரு காயினாக பயன்படுத்துனீங்க... அது நடக்கல என்றதும் என்னை டார்கெட் செய்யாதீங்க... சும்மா சீமானை அம்பலப்படுத்துவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் செருப்பால் அடிப்பேன்... என் சந்தோஷத்தில் மண்ணை அள்ளி போட நினைக்காதீங்க... எனக்கு என்ன பண்ணணுமோ அதை சீமான் பண்ணுவார்.. நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பண்ணுவார்கள்... நீங்க உங்க வேலையை பாருங்க..

நீங்க ஆம்பளையா இருந்தீங்கன்னா சீமான் மீது புகார் கொடுங்க... என்னை காயினா யூஸ் பண்ணாதீங்க.. உங்க முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவே, சீமானுடைய அப்பா தவறிப்போனபோது, சீமானுக்கு கால் பண்ணி, "நாங்க இருக்கோம் கவலைப்படாதீங்கன்னு" சொல்லியிருக்கிறார்... அதே சீமான் கள்ளச்சாராயம் விஷயத்தில் 10 கோடி தருவதாக சொல்லி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.. உங்களால் அவரை என்ன செய்ய முடிந்தது?

லவ் சீமான்: அதனால விஜயலட்சுமியை வைத்து சீமானை அடிக்க நினைச்சா அது என்கிட்ட நடக்காது... நான் சீமானை ரொம்ப ரொம்ப லவ் பண்றேன்.. நான் அவருடன் வாழ்ந்திருக்கிறேன்.. சீமானோட முதல் மனைவி நான்.. அவரை என் மூச்சா பார்க்கிறேன்... இந்த வாரம் பூரா என்ன பண்ண போறேன் தெரியுமா? சீமானின் டயலாக் எல்லாம், நானும் நாம் தமிழர் கட்சியினரும் பேசி பேசி கொண்டாட போறோம்.. அதை பார்த்து பார்த்து நீ ஒப்பாரி வெச்சுக்கோ" என்று விஜயலட்சுமி பரபரப்பாக பேசியுள்ளார். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Famous Actress vijayalakshmi supports seeman and what happened actually

ஆனால், இந்த வீடியோ உண்மையானது இல்லை என்கிறார்கள் சிலர்.. இதற்கு சில காரணங்களையும் இணையவாசிகளே சொல்கிறார்கள்..

"விஜயலட்சுமி தனிப்பட்டமுறையில் நிறைய பாதிப்புகளை சந்தித்தவர், கண்ணீர்விட்டு பலமுறை அழுதவர்.. இப்படி திடீரென மனம் மாறியிருக்க வேண்டிய அவசியமே அவருக்கு இல்லை.. யாரோ வேண்டுமென்றே விஜயலட்சுமியின் பெயரையும், திமுக பெயரையும் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே வெட்டி - ஒட்டி - திரித்து வெளியிட்டுள்ளார்கள்" என்கிறார்கள்..

தனிப்பட்ட விஷயம்: மேலும் சிலரோ, "இந்த வீடியோ உண்மைதான்.. திடீர்னு எப்படி சீமான் மேல இவ்ளோ பாசம்? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.. மேலும் சிலரோ, "இதெல்லாம் அவரவர் சொந்த விஷயம்.. நாம எதுக்கு தலையிடணும்? இதெல்லாம் கடந்து போய்விடுவோம்" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+