"பிரபல நடிகைகள்".. அப்பார்ட்மென்ட்டில் விபச்சாரம்.. சட்டுனு நுழைந்த போலீஸ்.. சிக்கிட்டாரே "சங்கீதா"
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை சென்னை போலீசார் மீட்டுள்ளனர்
சென்னை: அப்பார்ட்மென்ட்டுக்குள் அடிக்கடி இளைஞர்கள் வந்துபோவதாக தகவல்கள் கிடைக்கவும், போலீசார் அந்த வீட்டை ரவுண்டு கட்டிவிட்டனர்.. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும், பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை அழைப்பதை குற்றமாக்கும் சட்டத்தை நீக்க வேண்டும், இந்த தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை பாலியல் தொழிலாளர்கள் பல காலமாகவே முன்வைத்து வருகின்றனர்.
அதேசமயம், விபச்சார தொழிலையும் கைவிடாமல் காசு பார்த்து வருகின்றனர்.. சட்டவிரோதமாக இதுபோன்ற செயல்படுவோரை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் போலீசார் இறங்கி வருகிறார்கள்..

தமிழ் நடிகைகள்
ஆடம்பர வாழ்க்கை, கையில் நிறைய காசு, போன்றவைகளுக்கு ஆசைப்பட்டு இளம்வயதிலேயே வாழ்க்கையை தொலைக்கும் இளம்பெண்களும் ஏராளம்.. சிலர், இதெல்லாம் தெரிந்தும்கூட, இந்த தொழிலை செய்ய படித்த பெண்களே முன்வருவது வேதனையை தந்துவருகிறது.. சமீபத்தில்கூட மும்பையில் ஒரு பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கேள்விப்பட்டு, உள்ளே போலீசார் நுழைந்துள்ளனர்.. அங்கே 2 தமிழ்நடிகைகள் சிக்கி உள்ளார்கள்.. அதுவும் ஹீரோயின்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.. தமிழ்தவிர, சில இந்திப்படங்களிலும் 2 பேரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்களாம்..

தமிழ் நடிகைகள்
இவர்களுக்கு தற்சமயம் மார்க்கெட் இல்லை என்பதாலும், கைவசம் படம் இல்லை என்பதாலும், காசு இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் விபச்சாரத்திற்கு வந்துவிட்டதாக 2 பேரும் போலீசில் அழுது புலம்பி உள்ளனர்.. எனினும், அந்த நடிகைகள் மீது வழக்கு மட்டும் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களது பெயரை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர்.. அதேபோல, கடந்த மாதமும் ஒரு பங்களாவில் பாலியல் தொழில் நடப்பதாக தகவலறிந்து போலீசார் அங்கு கஸ்டமர் போல உள்ளே நுழைந்துள்ளனர்.. அந்த பங்களாவுக்குள்ளேயே ஒரு பெரிய குழியை தோண்டி, அதை ரூம் போல செட்டப் செய்துள்ளனர்.. அந்த ரூமுக்குள் மொத்தம் 26 பெண்கள் இருந்திருக்கிறார்கள்..

ரகசிய ரூம்கள்
எல்லாருமே வேறு வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. வேலை தேடி, வாய்ப்பு தேடி சொந்த கிராமங்களில் இருந்து கிளம்பி வந்தவர்கள்.. அவர்களுக்கு வேலை தருவதாக சொல்லி ஏமாற்றி, கட்டாயப்படுத்தி இப்படி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.. இதற்கெல்லாம் காரணமான 4 பேரை போலீசார் கைது செய்த போலீஸ், ரகசிய அறையில் இருந்த 26 பெண்களையும் மீட்டிருந்தனர். இப்படி நம் தமிழகத்திலும் ஏராளமான இளம்பெண்கள், பாலியல் தொழில் செய்பவர்களிடம் சிக்கி கொண்டுவிடுகின்றனர்.. அதுபோன்ற அப்பாவி பெண்களை, நம்முடைய போலீசாரும் மீட்டு வருகின்றனர்.

அப்பார்ட்மென்ட்
நேற்றுகூட ஒரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் விபச்சாரம் நடப்பதாகவும், குடும்ப பெண்களை இங்கு அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் தள்ளிவிட்டு பணம் சம்பாதிப்பதாகவும் விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது... இந்த அப்பார்ட்மென்ட்டிற்கு சந்தேகத்திற்கிடமான வகையில், நிறைய இளைஞர்கள் தினமும் வந்து செல்வதாக அந்த பகுதி மக்களே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

கஸ்டமர்கள்
இதையடுத்து, அந்த அப்பார்ட்மென்ட்டை தேடி விபச்சார தடுப்பு தனிப்படை போலீசார் விரைந்தனர்.. மஃப்டியில் மறைந்திருந்து, அந்த அப்பார்ட்மென்ட்டை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த அப்பார்ட்மென்ட்டுக்குள் இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றது உறுதியானது.. அதற்கு பிறகுதான், சம்பந்தப்பட்ட வீட்டை போலீசார் முற்றுகையிட்டு, அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனையும் நடத்தினர். அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 பெண்களையும் மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது, கண்ணீருடன் தங்கள் கதைகளை விவரித்தனர்..

கண்ணீர் கதை
இந்த பெண்களுக்கு திருமணமாகிவிட்டதாம்.. குழந்தைகளும் இருக்கிறார்களாம்.. குடும்ப பாரத்தை சுமக்க, வேலை தேடி வந்துள்ளனர்.. அப்போதுதான், பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் இவர்கள் சிக்கி உள்ளனர்.. வேலை வாங்கி வருவதாகவும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி அழைத்து வந்திருக்கிறார்கள்.. சென்னையில் இந்த அப்பார்ட்மென்ட்டுக்கு வரும்வரை, தங்களுக்கு வேலை கிடைக்கும் என்றே நம்பி வந்துள்ளனர்..

கதறல்கள்
அவர்களை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தபோதுதான், பாலியல் சமாச்சாரம் என்று விஷயம் புரிந்துள்ளது.. அதற்கு பிறகு, கஸ்டமர்களை எப்படி கவர்வது என்பது பற்றி, இதற்காகவே "தனி டிரெயினிங்" தந்தார்களாம்.. மற்றொருபக்கம், தாங்கள் நல்ல வேலையில் இருப்பதாக, அந்த பெண்களை அவர்களது குடும்பத்தாருக்கு செல்போனில் பேச சொல்லி நம்ப வைத்துள்ளனர்.. இங்கு வந்து மாட்டிக் கொண்ட நிலையில் தப்பி போக வழியில்லை என்று போலீசாரிடம் அந்த பெண்கள் கதறி அழுதுள்ளனர்.. இறுதியில் இருவரையும் மீட்டு, போலீசார் அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

சங்கீதா சங்கீதா
அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.. இந்த குடும்ப பெண்களை விபச்சாரத்தில் தள்ளி, அதற்கு டிரெயினிங் தந்ததும் ஒரு பெண்தான்.. அவர் பெயர் சங்கீதா.. 28 வயதாகிறது.. திருவேற்காட்டைச் சேர்ந்தவர்.. பெண் புரோக்கர் சங்கீதா என்றால், அமைந்தகரையில் ஃபேமஸ் என்கிறார்கள்.. இவருக்கு இன்னொரு நபர் உதவியாக இருந்து வந்துள்ளார்.. அவர் இப்போது எஸ்கேப் ஆகிஉள்ளதால், அவரையும் நம் போலீசார் தேடி வருகிறார்கள். சங்கீதாவின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் இப்போது ஜெயிலில் இருக்கிறார்.

அப்பார்ட்மென்ட்ஸ்
தலைமறைவாக உள்ள நபர்தான், சங்கீதாவுக்கு பலவகைகளில் இந்த தொழிலில் உதவியாக இருந்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு சில விபச்சார குழுக்களுடன் தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த வழக்கில் அவர்தான் முக்கிய நபர் என்பதால், அவரை பிடித்தால்தான், மேலும் விவரங்கள் தெரியவரும் என்கிறார்கள்.. குடியிருப்பு பகுதிகளிலேயே, வாடகைக்கு குடியிருப்பதுபோல, வீட்டை பிடித்து விபச்சாரம் நடத்துவது அதிகமாகி வருகிறது..

சான்ஸஸ்
பெரும்பாலும் வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களும், சினிமா, டிவி சீரியர்களில் நடிக்க சான்ஸ் கேட்டும் வருபவர்களும்தான், இதுபோன்ற விபரீதங்களில் சிக்கி கொள்கிறார்களாம்.. இதில் சிலர் மாநிலம் விட்டு மாநிலம் வந்துவிட்டதால், ஊர் தெரியாமல், மொழி தெரியாமல், தப்பிக்க வழியும் இன்றி சிக்கி விடுகிறார்கள் என்கிறார்கள்.. அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அழைத்து சென்று தங்க வைத்து அவர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி வருவதால், இதுதொடர்பான கண்காணிப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications