இனிதான் கச்சேரி.. சிறையிலிருந்து விரைவில் வெளிவரும் சசிகலா.. அதிமுகவில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்?
Recommended Video
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, விரைவிலேயே விடுதலை ஆகி வெளியே வந்து அதிமுகவை ஒன்றிணைப்பார், என்று அடித்துக் கூறியுள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.
கடந்த சில வாரங்களாகவே, சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரிதாகப் பேசப்பட்டு வருபவர் ஜோதிடர் பாலாஜி ஹாசன். இதற்கு காரணம், இவர் வரிசையாக கணித்து அனைத்துமே அச்சுப்பிசகாமல் அப்படியே நடந்துள்ளது என்பது தான்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராவார் என்று கணித்தது போலவே நடந்தது.

ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணிப்புகள்
மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் சரியாக கணித்து இருந்தார் பாலாஜி. அரசியல் மட்டுமல்ல உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சிறு இடைவெளியில் தான் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விடும் என்று கூறியிருந்தார். அதே போல, அரையிறுதியில் நியூசிலாந்திடம் போராடி தோற்றது இந்தியா.

துர்கா ஸ்டாலின்
இப்படி மளமளவென மக்களிடம் ஃபேமஸான பாலாஜியை, திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, சந்தித்து தனது கணவர் முதல்வராகும் வாய்ப்பு உள்ளதா என்று கேட்கும் அளவுக்கு நிலைமை சென்று விட்டது. அவரும் ஸ்டாலின் முதல்வர் ஆவார், என்று அருள்வாக்கு கூறி வந்து விட்டார்.

அதிமுக பலம்
இந்த நிலையில்தான், சசிகலா விரைவிலேயே சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும், அதிமுகவை இணைத்து பலப்படுத்துவார் என்றும் பாலாஜி கூறியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியினர், இந்த வீடியோக்களை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

முக்கிய பிரமுகர்கள்
அதுமட்டுமா கட்சி இணைப்பின் போது ஒரு சில முக்கிய நபர்களை கட்சியில் இருந்து சசிகலா வெளியேற்றுவார் என்றும் அந்த வீடியோவில் தகவல் இடம்பெற்றுள்ளது. எனவே அரசியல்ரீதியாக சசிகலாவை பகைத்துக் கொண்டவர்கள், இப்போது பதட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

சர்ச்சை
பாலாஜி கூறிய அனைத்தும் பலித்தது போல சசிகலா விரைவில் விடுதலையாகி, அதிமுகவை ஒருங்கிணைத்து, இப்போது இருக்கும் முக்கியமானவர்களை வெளியேற்றினால், என்ன ஆவது என்ற பேச்சுக்கள் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
-
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர்












Click it and Unblock the Notifications