ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன் மூர்த்தி.. பாஜக அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்
சென்னை: தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜூன் மூர்த்தி ரஜினிகாந்த் கட்சிக்கு தாவியதால், அப்பொறுப்புக்கு பிரபல ஜோதிடர் ஷெல்வீ தாமோதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். டிசம்பர் 31ம் தேதி இது பற்றி அறிவிக்கப்படும் என்றார். அத்துடன் தான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி என்றும தோற்றால் அது மக்களின் தோல்வி என்றும் கூறினார். மேலும் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என்றார்.

ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவருடன் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மற்றும் பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜூன் மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில் பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜூன் மூர்த்தி திடீரென ரஜினி பக்கம் தாவியதால் அவருடைய அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டு பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் அர்ஜூன் மூர்த்தி வகித்த தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் பதவிக்கு பிரபல ஜோதிடர் ஷெல்வீ தாமோதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications
