சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரதிராஜாவை பார்த்ததுமே.. உருகிய ஓபிஎஸ்.. என்னவா இருக்கும்.. அதே ஸ்மார்ட் லுக்கில் "இமயம்".. செம்ம

பாரதிராஜாவை ஓபிஎஸ், வைத்திலிங்கம் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளனர்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்... சிகிச்சை முடிந்து வீட்டிலேயே ஓய்வு எடுத்து வரும் பாரதிராஜாவிடம் அவரது உடல்நலம் குறித்து ஓபிஎஸ் அக்கறையுடன் கேட்டறிந்தார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா, கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார்.. ஆனால், அன்றைய தினமே அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது..

அதனால், தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சையை மேற்கொண்டு வந்தார் பாரதிராஜா..

 பிரதமர் மோடி தொடர்பான புகார்.. 6 ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததாம்.. திடீரென ஆக்ஷனில் குதித்த போலீஸ்! பிரதமர் மோடி தொடர்பான புகார்.. 6 ஆண்டுகளுக்கு முன் கொடுத்ததாம்.. திடீரென ஆக்ஷனில் குதித்த போலீஸ்!

 நிலைகுலைந்தனர்

நிலைகுலைந்தனர்

இதற்கு வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.. அன்றைய தினம், உடல்நிலை மோசமாகிவிட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... அதற்கு பிறகு, அமைந்தகரையில் உள்ள இன்னொரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்... பாரதிராஜாவுக்கு உடல்நலம் குறைபாடு என்றதுமே அவரது ரசிகர்கள் பதைபதைத்து போனார்கள்.. சினிமா உலகமே டென்ஷனாக காணப்பட்டது. ஆனால், பாரதிராஜா, தன்னுடைய உடல்நிலை குறித்து உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டார்..

நிம்மதி

நிம்மதி

அதில், விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த அறிக்கை அவரது ரசிகர்களுக்கு நிம்மதியையும், தைரியத்தையும் தந்தது.

பாரதிராஜா

பாரதிராஜா

பிறகு, செப்டம்பர் 9ம் தேதி பாரதிராஜா டிஸ்சார்ஜ் ஆகி நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வந்தார்.. அதற்கு அடுத்தநாளே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாரதிராஜாவை சென்று சந்தித்து நலம் விசாரித்தார்... எனினும், பாரதிராஜாவுக்கு உடல்நலம் பூரணமாக குணமடையவில்லை என்று கூறப்பட்டது.. டிஸ்சார்ஜ் ஆகி வந்த சில நாட்களிலேயே மறுபடியும், சிறுநீரக குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.. தற்போது, முழுசிகிச்சையும் முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் பாரதிராஜா.. அவரை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று நேரில் சென்று சந்தித்துள்ளார்..

 வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

பாரதிராஜாவிடம் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்திருக்கிறார்.. ஓபிஎஸ்ஸுடன் வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் போன்றோரும் உடன் சென்றிருக்கிறார்கள்.. இவர்கள் அனைவருமே பாரதிராஜாவை சந்தித்து பேசி, உடல்நலம் குறித்து விசாரித்த போட்டோக்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி உள்ளன.. சில நாட்களுக்கு முன்புதான், பாரதிராஜாவின் சிஷ்யர் பாக்யராஜ், திடுதிப்பென்று ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.. இவர் எதற்காக ஓபிஎஸ் அணியில் இணைந்தார் என்று இதுவரை தெரியவில்லை..

பாக்யராஜ்

பாக்யராஜ்

எடப்பாடியை சந்தித்து பேசி 2 பேரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குவதாக கூறியிருந்தார்.. ஆனால், அந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.. பாரதிராஜாவை பொறுத்தவரை, கடந்த காலங்களில் கடுமையாக கருணாநிதியையும், ஸ்டாலினையும் விமர்சித்து வந்தவர் என்பதை தமிழகம் நன்கு அறியும். எனினும், முதல்வர் ஸ்டாலின், எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் பாரதிராஜாவை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வந்தார்.. அப்போது, பாரதிராஜா படுக்கையில் சாய்ந்தவாறு படுத்திருந்தார்.. இதை பார்த்ததும் திமுக தொண்டர்கள், ஒரு மாநில முதல்வருக்கு உரிய மரியாதை தர தெரியவில்லையே "முதல் மரியாதை" டைரக்டருக்கு என்று இணையத்தில் கருத்துக்களை சூடாக பதிவிட்டனர்..

ஹேப்பி

ஹேப்பி

உடல் உபாதைகளுடன், சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த ஒருவரை, இப்படியெல்லாம் குற்றம் கண்டுபிடிக்க கூடாது என்று பதில் கமெண்ட்கள் இணையத்தில் பாரதிராஜாவுக்கு ஆதரவாக குவிந்தன... இந்நிலையில், பாரதிராஜா உடல்நலம் தேறி உள்ளதை, ஓபிஎஸ்ஸுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களிலேயே தெரிகிறது.. தங்கள் டைரக்டரை தெம்புடன் பார்த்ததுமே அவரது ரசிகர்கள் பூரித்து போய்விட்டனர்.. பெருத்த மகிழ்ச்சியுடன் இந்த போட்டோக்களை ஷேர் செய்தும் வருகின்றனர்..!!!

English summary
Famous Director Bharathiraja: OPS and Vaithiyalingam meet director bharathiraja in Neelangarai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X