சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெரிய அளவில் குறைந்துள்ளதாக சமீபத்திய தரவுகள் கூறினாலும், ஆடம்பர சந்தை இன்னும் உயிர்ப்புடனே இருப்பத்தை அடுத்தடுத்து நடக்கும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் காட்டுகிறது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் நகை விற்பனை தளமாக கேரட்லேன் நிறுவனரான Mithun Sacheti சென்னைில் ரூ.36.5 கோடி மதிப்பில் ஒரு பிரீமியம் சொத்தை வாங்கியுள்ளார்.

மிதுன் சச்சேட்டி, CaratLane நிறுவனத்தில் தன்னிடம் இருந்த 27.18% பங்குகளை டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்திற்கு சுமார் 4,621 கோடி ரூபாய்க்கு விற்றார். 2023 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த இந்த விற்பனைத்து பின்பு மிதுன் மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்கியுள்ளார்.
மிதுன் சச்சேட்டி சகோதரர் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் சுமார் 160 கோடி ரூபாய்க்கு 2 அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கி அசத்தினார். தற்போது மிதுன் சச்சேட்டி சென்னையில் மிகப்பெரிய அளவிலான இடத்தையும், வீட்டையும் வாங்கியுள்ளார். மிதுன் தனது பங்குகளை விற்கும் போது கேரட்லேன் நிறுவனம் சுமார் 17,000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டது. இந்த விற்பனை இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மிகவும் முக்கியமானது.
மிதுன் சச்சேட்டி வங்கியுள்ள இப்புதிய சொத்து சென்னையின் மையப்பகுதியில் உள்ள தேனாம்பேட்டை JJ சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதி நீண்ட காலமாக ஆடம்பர ரியல் எஸ்டேட் பகுதியாகவே திகழ்ந்து வந்தது.
இதை சரியாக கவனித்து மிதுன் சச்சேட்டி சுமார் 7044 சதுரடி கொண்ட இடம் மற்றும் 5,210 சதுரடி கொண்ட வீட்டையும் வாங்கியுள்ளார்.
இந்த இடத்தில் இரண்டு வீடுகள், ஒரு பொதுப் பாதை என இரண்டு விற்பனையாளர்களுடன் மொத்த சொத்தையும் மிதுன் சச்சேட்டி வாங்கியுள்ளார்.
சமீபத்தில் சென்னை ஆடம்பர ரியல் எஸ்டேட் சொத்து விற்பனையில் முக்கியமாக ஃபிரஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் ஜனவரி மாதம் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பெரிய சொத்தை வாங்கியிருந்தார். இவர் வாங்கிய சொத்து சுமார் 12,831 சதுரடி நிலப்பரப்பு மற்றும் 10,500 சதுர அடி கட்டிடம் கொண்டுள்ளது.
மிதுன் சச்சேட்டியின் சகோதரர் Siddhartha Sacheti, மும்பையின் வோர்லி பகுதியில் Oberoi Realty நிறுவனத்தின் Three Sixty West கட்டிடத்தில் உள்ள 2 வீடுகளை சுமார் 160 கோடி ரூபாய்க்கு, தலா ரூ.80 கோடி மதிப்பில் வாங்கினார். இது 6,130 சதுர அடி பரப்பளவுடன் மற்றும் ஐந்து கார் பார்க்கிங் வசதியுடன் உள்ளன.
இந்தியாவின் முக்கிய 9 பெரு நகரங்களில் ஜனவரி முதல் மார்ச் 2026 வரையிலான காலாண்டில் வீடுகளின் விற்பனை 1 லட்சத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. இதில் சென்னையில் 4 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்திய ரியல் எஸ்டேட் சந்தை எப்போதும் இல்லாமல் மந்த நிலைக்குள் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications