சும்மா டேங்கர் லாரிய வெடிக்க வச்சு 500 பேரை போட்டு தள்ளிடுவேன்.. மிரட்டல் ஆடியோ விடுத்த கோழி அருள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டேங்கர் லாரியை வெடிக்கச் செய்து 500 பேரை கொன்றுவிடுவேன் என மிரட்டல் ஆடியோ விடுத்த ரவுடி கோழி அருளை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி அருகே உள்ள பங்களாசுரண்டையை சேர்ந்தவர் கோழி அருள். இவர் மீது நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சென்னையிலும் பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் தாழையூத்தில் கண்ணன் எனும் ஒப்பந்ததாரர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கோழி அருள் பரபரப்பான ஆடியோவை வெளியிட்டார்.

குற்றவாளிகள்

குற்றவாளிகள்

அதில் அவர் கூறுகையில் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். கோழி அருளுக்கு ஒரே போர்ஸ்தான். உங்களுக்கு ஸ்டிரைக்கிங் போர்ஸ் வரும். எனக்கு ஒரே போர்ஸ்தான். அதற்கான ஆயுதம் கேஸ் டேங்கர் லாரி.

செத்தாலும் கவலையில்லை

செத்தாலும் கவலையில்லை

எங்கே எதை கொளுத்த வேண்டும் என எனக்கு தெரியும். நான் செத்தாலும் கவலையே படமாட்டேன். டேங்கர் லாரியோடு 500 பேரை கொன்றுவிட்டுதான் சாவேன் என கூறியுள்ளார். அதே நேரத்தில் டிஜிபிக்கு சவால் விடும் வகையில் இவர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

நெல்லை

நெல்லை

இதையடுத்து கோழி அருளை பிடிக்க நெல்லையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், சப் இன்ஸ்பெக்டர் காதர் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கோழி அருள் அம்பத்தூர் எஸ்டேட் அருகே அத்திப்பட்டில் தனது சித்தப்பா வீட்டில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

சுற்றிவளைத்த போலீஸ்

சுற்றிவளைத்த போலீஸ்

இதையடுத்து போலீஸார் நேற்று சம்பவ இடத்திற்கு போய் கோழி அருள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவரை துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

2 வழக்குகள்

2 வழக்குகள்

கோழி அருள் மீது 23 வழக்குகள் உள்ளன. நெல்லை பெருமாள்புரத்தில் 1995ஆம் ஆண்டு அடுத்தடுத்து 2 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு வழக்கு கொலை முயற்சி வழக்காகும். இதையடுத்து 1996ஆம் ஆண்டு பெருமாள்புரத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கிலும் கோழி அருள் ஏற்கெனவே கைதாகியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+