டாடி ஆறுமுகம் ஆடிப்போயிட்டாரு.. பொசுக்னு விழுந்த ஆபாச போட்டோ.. திணறிப்போன "வில்லேஜ் ஃபுட் பேக்டரி"
சென்னை: பிரபல சமையல் கலைஞர், டாடி ஆறுமுகம் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.. என்ன நடந்தது? யார் இந்த காரியத்தை செய்தது?
புகழ்பெற்ற ஓட்டல்களின் செஃப்கள் மட்டுமே, டிவிக்களில் சமையல் ஷோ செய்து கொண்டிருந்த நிலையில், அந்த நடைமுறையை நொறுக்கி தள்ளியவர் டாடி ஆறுமுகம்.

இயற்கை சூழல் நிறைந்த பகுதிகளில், நம் வீடுகளில் உள்ள சமையல் பொருட்களை பயன்படுத்தியே டாடி ஆறுமுகம் செய்யும் சமையலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
அயிரை மீன்: இவர் சமைக்கும் அயிரை மீன் குழம்பு முதல் மட்டன் பிரியாணி வரை மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டது.. திங்கள் முதல் வெள்ளி முதல் தினமும் வெளியாகும் இவரது வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் விழுந்தனர்..
இதற்கு பிறகு, வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற யூடியூப் சேனல் மூலம் குக்கிங் வீடியோவை உலகளவில் கொண்டு சென்றார்.. ஆனால், இதை முறையாக கொண்டு சென்றவர் அவரது 33 வயதாகும் மகன் கோபிநாத் என்பவர்தான்.
பிரியாணி: மணக்க மணக்க தயாராகும் இந்த சமையல் வீடியோ சேனலை, 53 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த டாடி ஆறுமுகம் மதுரை, புதுவையில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் டாடி ஆறுமுகம் பிரியாணி என்ற பெயரிலும் ஹோட்டல் நடத்தி வருகிறார். சொந்தமாக வீடு வாங்கிவிட்டாராம்.. கார் வாங்கிவிட்டாராம்.
இப்போது விஷயம் என்னவென்றால், டாடி ஆறுமுகத்தின் இந்த "வில்லேஜ் புட் ஃபேக்டரியின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி விட்டார்களாம். அதுவும் இல்லாமல், ஆபாச போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்களாம்... டாடி ஆறுமுகத்தின் கிச்சன் வீடியோவில், திடீரென வந்து விழுந்த ஆபாச போட்டோக்களை பார்த்து, ஃபாலோயர்ஸ்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
டாடி ஆறுமுகம்: இதனிடையே, தங்களின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வில்லேஜ் புட் பேக்டரி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில், "யாரோ சிலர் அருவருக்கத்தக்க புகைப்படங்களை எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிடுகிறார்கள். எத்தனை முறை அதை நீக்கினாலும் மீண்டும் ஸ்டோரியாக பதிவிடப்படுகிறது. முகநூல் நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும், நன்றி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு: மேலும், ஃபேஸ்புக் பக்கத்தை மீட்கும் முயற்சியில் வில்லேஜ் புட் பேக்டரி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறதாம்.. இந்த செய்தி இணையத்தில் பரபரப்பாக ஷேர் ஆகி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications