பொண்டாட்டியை விட விஜய்தான் முக்கியம்.. செத்துருவேன்.. விஜய் ரசிகர் உருக்கம்.. குலுங்கிய குடும்பம்
சென்னை: அம்மா, அப்பாவைவிட எனக்கு விஜய்தான் முக்கியம் என்றும் விஜய் நேரில் வந்தால் நான் இறந்துடுவேன் என்றும் ஒரு தொண்டர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியிருப்பது சமூகவலைதளங்களில் வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.
இதுகுறித்து தவெக தொண்டரிடம் செய்தியாளர் ஒருவர், "விஜய்யை நேரில் பார்த்தால் என்ன செய்வீங்க" என கேட்டதற்கு, அந்த தொண்டர், "அண்ணா நான் செத்துடுவேன்"ண்ணா என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த செய்தியாளர், "விஜய்யை நேரில் பார்த்தால் என்ன கேட்பீங்க" என கேட்டதற்கு, அய்யோ வேண்டாம்ணா அவர் அப்படியே இருக்கட்டும்.

எனக்கு என் பொண்டாட்டி வேணுமா, தளபதி வேணுமானு கேட்டா, தளபதின்னு சொல்லுவேன். என் அம்மா, அப்பாவைவிட எனக்கு தளபதிதான் முக்கியம்" என அவர் கூறியிருந்தார். இது சமூகவலைதளத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வதுண்டு! அதாவது நம்மை படைத்த கடவுளுக்கே கடைசி இடம்தான். அப்படியிருக்கும் போது சினிமாவில் நடித்து ரசிகர்களின் பல்லாயிரம் கோடிகளை உறிஞ்சி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய்தான் முக்கியம் என இந்த இளைஞர் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவில் உள்ள பல தொண்டர்கள் இது போல் முட்டாள்தனமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஒரு முறை புதுவையில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், ஒரு பெண், "என் கணவரை விட எனக்கு விஜய்தான் பிடிக்கும்" என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
அது போல் ஈரோடு மாவட்டத்தில் தவெக பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவர், "என் வீட்டில் 9 பேருக்கு ஓட்டுரிமை இருக்கிறது. அவர்கள் எல்லாரும் விஜய்க்குத்தான் ஓட்டு போட வேண்டும். அப்படி போடாவிட்டால் சோற்றில் விஷம் வைத்துவிடுவேன்" என சற்றும் யோசிக்காமல் உளறி கொட்டினார்.
விஜய் ஒரு நிகழ்ச்சியில் "எனக்காக குடும்பத்தை மறக்காதீர்கள், குடும்பத்தை பாருங்கள்" என கூறி வரும் நிலையில் தவெகவை சேர்ந்த இளைஞர்கள், இளைஞிகள் இது போல் குடும்ப கட்டமைப்பு, தமிழ் கலாச்சாரம், மனிதநேயம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார்கள். இதனால்தான் இவர்களை தற்குறிகள் என அரசியல் கட்சியினரும் நெட்டிசன்களும் விமர்சிக்கிறார்கள். இந்த இளைஞரின் பேச்சு விஜய் பேச்சையே மீறியதாக கருதப்படுகிறது.
விஜய்க்காக நான் செத்துடுவேன் என சொல்லும் அந்த இளைஞர், ஒரு வினாடி கூட நாம் செத்துவிட்டால் நம் குடும்பம் நடுத்தெருவில் நிற்குமே என நினைக்கவில்லை. அது போல் கணவரை விட விஜய்தான் முக்கியம் என சொன்ன அந்த பெண், இந்த பேட்டி டிவியில் ஒளிபரப்பானால் நம்மை மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்றும் நினைக்கவில்லை.
சோற்றில் விஷம் வைத்துவிடுவேன் என சொன்ன பெண்ணும் இத்தனை நாள் நம்மை பெற்று வளர்த்த, உடன் பிறந்த, தொட்டு தாலி கட்டிய உறவுகளுக்கு விஷம் வைப்பதாக சொல்கிறோமே என்ற குற்ற உணர்ச்சியும் இல்லை. சட்டசபை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற போகிறது, விஜய் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும், எவ்வளவு வாக்கு சதவீதத்தை பெறும் என்ற தகவல்கள் தேர்தல் முடிவுகளின் போது வெளியானால் என்ன நடக்குமோ என்ற அச்சம்தான் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications