28 வருஷமா ஓடிட்டு இருந்த கடிகாரம்..டோட்டல் டேமேஜ்! தாத்தா கதற விட்டுட்டாரே! அன்றே கணித்த அனிருத்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தற்போது வெளியான இந்தியன் - 2 படம் ரசிகர்களின் வரவேற்பை பெறத் தவறியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 28 ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களின் மனதில் இந்தியன் படத்தின் மூலம் இடம் பெற்றிருந்த கமல்-ஷங்கர் கூட்டணி, பெரிய ஏமாற்றத்தை அளித்திருப்பதாக குமுறுகின்றனர்.
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னால் உலகநாயகன் கமலஹாசன் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இணைந்து உருவாக்கிய இந்தியன் படம் வெளியானது. இதில் சுகன்யா, மணிஷா கொய்ராலா, கவுண்ட மணி,செந்தில் என பல நட்சத்திரங்கள் இணைந்திருந்தன.

அந்த காலத்திலேயே பிரம்மாண்ட செட்கள், கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான இந்தப் படம் பெருவெற்றி வெற்றது. குறிப்பாக இந்தியன் தாத்தா மற்றும் வயதான சுகான்யாவுக்கு மேக்-அப் போடுவதற்கு ஹாலிவுட்டில் இருந்து மேக்கப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் படத்திற்கு பிறகு முதல்வன், நண்பன், சிவாஜி, எந்திரன் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படைப்புகளை சங்கர் கொடுத்திருந்தாலும் கமலஹாசனும் ஷங்கரும் எப்போது இணைவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இதற்கு விடை கொடுக்கும் விதமாக மிகப்பெரிய பொருட்ச் செலவில் இந்தியன் 2 உருவாகும் என அறிவிக்கப்பட்டது. லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் உடன், எஸ்ஜே சூர்யா, சித்தாத், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, டெல்லி கணேஷ்,பாபி சிம்ஹா என பல நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தது. இதனிடையே இடையே நடிகர் கமலஹாசனின் அரசியல் என்ட்ரி, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, கொரோனா என பல காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. ஒரு வழியாக படம் நிறைவடைந்த நிலையில் நேற்று வெளியானது.
ஆனால் பல ஆண்டுகால காத்திருப்பை இந்தியன் 2 பூர்த்தி செய்துள்ளதா என்றால் அது கேள்விக்குறி தான். சங்கரின் பழைய மேக்கிங் பல ஆண்டுகளாகவே மிஸ் ஆனதாகக் கூறி வரும் ரசிகர்கள்.. அதனை இந்தப் படத்தில் முழுமையாக உணர்ந்து வருகின்றனர். குறிப்பாக சுஜாதா இல்லாமல் அவர் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் தடுமாறி வருவதாகவே கூறுகின்றனர். சிவாஜி படத்திற்குப் பிறகு சங்கர் இயக்கத்தில் வெளி வந்த எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்கள் வசூலில் சாதித்தாலும், ரசிகர்களை திருப்திக்குள்ளாக்கியதா என்றால் அதுவும் கேள்விக்குரிதான்.. சரி தற்போது இந்தியன் 2 படத்துக்கு வருவோம்..
சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த இந்தியன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கமலின் தோற்றம், ஹாலிவுட் தரத்திலான மேக்க,ப் ஷங்கரின் மேக்கி,ங் சுஜாதாவின் தெறிக்கும் வசனங்கள், அட்டகாசமான நடிப்பு, செந்தில் -கவுண்டமணி கூட்டணியில் காமெடி ட்ராக் உள்ளிட்டவற்றால் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இந்தியன் 2 படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறது என்று கூறுகின்றனர்.
ஏஆர் ரகுமானுக்கு இணையான இசையை அனிருத்தால் கொடுக்க முடியவில்லை. 28 ஆண்டுகள் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்த இந்தியனை இந்தியன் 2 கொலை செய்து விட்டதாகவே கூறுகின்றனர் ரசிகர்கள். சங்கரின் படத்தை தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என நம்பிக்கையில் வந்த பல ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருக்கின்றனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் திரைக்கதைக்கு கொஞ்சம் கூட இந்தியன் 2 பக்கத்திலேயே வரவில்லை.
மோசமான திரைக்கதை, மிக மெதுவாக நகரும் காட்சிகள், சம்பந்தமே இல்லாமல் வரும் நடிகர்கள், ஏற்கனவே யூகித்த முடிவு, மேலும் ஒத்து வராத பேக்ரவுண்ட் இசை என படம் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் காரணமாகவோ 'என்னவோ தாத்தா வராரு கதர விட போறாரு' என அனிருத் படம் குறித்து முன்னமே சொன்னாரோ என கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
படத்தில் ஒரே ஒரு ஆறுதல் நீண்ட நாட்களுக்குப் பிறகு விவேக்கை திரையில் காண்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் அவரது நகைச்சுவை படத்தில் மிஸ் ஆவதாக கூறுகின்றனர். ரசிகர்கள் மற்ற சங்கர் படங்களைப் போல சமூக கருத்து இருந்தாலும், அது இன்றைய தலைமுறைக்கு சென்று சேரும் வகையில் இருக்கிறதா என்பது கேள்விதான். மேலும் ஏற்கனவே இந்தியன் படத்தை பார்த்தவர்களுக்கு இந்த படம் ஏமாற்றம் அளிக்கும். அதே நேரத்தில் இந்தியன் 2 படம் இந்தியன் 3 படத்துக்கான வெறும் டிரைலர் தான் என்கின்றனர் கமல் ரசிகர்கள்..
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications