ட்வீட் போடுறீங்க நல்லா இருக்கீங்க.. டிஸ்சார்ஜ் எப்போ.. ஆண்டவர் இல்லாத ஒரு பிக்பாஸா.. ரசிகர்கள் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசன் 83 திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்ட டிவிட்டர் பக்கம் வந்த போது எப்போது டிஸ்சார்ஜ் ஆவீர்கள் என் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை ரசிகர்கள் தாண்டி பொதுமக்களுக்கும் மிகவும் பிடிக்கும். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக தனக்கு வேண்டப்பட்டவர்களே இருந்தாலும் அவர்களை நாசுக்காக கண்டிப்பதில் சகலகலா வல்லவன் இவர்.

மேலும் பிக்பாஸில் மக்களிடையே புத்தகம் படித்தலை அதிகரிக்க நல்ல நல்ல புத்தகங்களை அவர் பரிந்துரை செய்வார். இதனால் அவருக்கு ரசிகர்களை தாண்டி நிறைய பேர் ரசிகர்கள் உள்ளார்கள்.

 திறமைசாலிகள்

திறமைசாலிகள்

பிக்பாஸை இவருக்கு பதிலாக வேறு ஒருவர் தொகுத்து வழங்குவார் என்பதை பலரால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இவருக்கு பதில் தொகுத்து வழங்குவோரும் திறமைசாலிதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதெல்லாம் கமல் மீதான அன்பின் வெளிப்பாடால் அவர் பிக்பாஸை தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள்.

வைரல்

வைரல்

கமல்ஹாசன் வீடு திரும்பிவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் வைரலான அதே நேரத்தில் கமல்ஹாசன் ட்வீட் போட்டிருந்தார். அதில் கபீர் கானின் 83 திரைப்படம் குறித்த டிரெய்லரை வெளியிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் கமல் வீட்டுக்கு வந்ததைதான் சொல்கிறாரோ என நினைத்து ஆசை ஆசையாக ட்விட்டரை ஓபன் செய்தார்கள்.

டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

ஆனால் 83 டிரெய்லரை பார்த்து ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து ரசிகர்கள் டிஸ்சார்ஜ் ஆகிட்டேனு தான் சொல்கிறீர்களோ என நினைத்தோம். எப்போ டிஸ்சார்ஜ் ஆண்டவரே?. நீங்கள் இல்லாமல் பிக் பாஸ் பார்க்கவே பிடிக்கவில்லை. சீக்கிரமாக வாங்க. ட்வீட் செய்வதை பா்த்தால் நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சீக்கிரமாக குணமாகி வீடு திரும்புங்க ஆண்டவரே என கூறியுள்ளனர்.

வணக்கம்

வணக்கம்

தலைவா வணக்கம் நலமாக சீக்கிரம் வீட்டுக்கு வாங்க அது போதும் எங்களுக்கு...

Recommended Video

    கொரோனா வந்தும் கமல்ஹாசன் நல்லாயிருக்குறதுக்கு காரணமே ரெண்டு தடுப்பூசிதான்.. மா. சு தகவல்!
    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    உங்களிடமிருந்து ட்வீட் பார்த்தவுடன் மகிழ்ச்சி! தங்களின் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி! மீண்டும் களத்தில் திரையில் பிக்பாஸ் வீட்டில் தங்களைத் தொடர்ந்து பார்க்கப் போகின்ற மகிழ்ச்சி! நன்றி நம்மவரே எச்சூழலாயினும் எம்முடன் தொடர்ந்து தொடர்பிலிருப்பதற்கு.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+