அருணாசலம் முதல் ஆதித்யா அருணாசலம் வரை.. மனிதன் முதல் பாட்ஷா வரை.. கார்டனில் குவிந்த "ரஜினிக்கள்"
சென்னை: ரஜினியின் பிறந்த நாளுக்கு அவருக்கு வாழ்த்து கூற போயஸ் தோட்ட இல்லத்தில் அவர் நடித்த படங்களின் கெட்அப்களில் ரசிகர்கள் வந்துள்ளனர். இதனால் மற்ற ரசிகர்கள் பூரிப்படைந்தனர்.
ரஜினிகாந்த்- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒருவர். இவர் சினிமா துறைக்கு வந்து 45 ஆண்டுகள் ஆயிற்று. இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக அவரை அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியுடன் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாளும் சேர்ந்து கொண்டது.

போயஸ் தோட்டம்
இதற்காக நள்ளிரவு போயஸ் தோட்ட வீட்டின் அருகே ரசிகர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். தற்போது கூட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினியின் வீடு முன்பு திரண்டுள்ளார்கள். அதில் நாடக கலைஞர்கள் பலரும் ரஜினி போல் வேடமணிந்துள்ளார்கள்.

அலங்காரம்
ரஜினி நடித்த மனிதன், தர்மதுரை, பாட்ஷா, அண்ணாமலை, அருணாசலம், பாபா, தர்பார் உள்ளிட்ட படங்களில் ரஜினியின் கெட் அப்களை போட்டுள்ளனர். நடை, உடை, அலங்காரம், ஸ்டைல் என போயஸ் கார்டனையே கலக்கி வருகிறார்கள். ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என அவர்கள் வாழ்த்தியுள்ளார்கள்.

ரசிகர்கள்
ரஜினியின் பிளாக்பஸ்டர் படங்களில் பாட்ஷா , அண்ணாமலை உள்ளிட்ட படங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர்களை பார்த்த மற்ற ரசிகர்கள் இந்த ரஜினிக்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ரஜினி தங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

ரசிகர்கள்
ரஜினி பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் தெறிக்க விடுவார்கள். அதிலும் அடுத்த மாதம் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளார் என்றால் சும்மா விடுவார்கள், பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications