ரஜினிக்கு "இடி".. நீங்கதாண்ணா எல்லாமே.. வாங்க அரசியலுக்கு.. தேனியை கலக்கிய போஸ்டர்.. "அவர்" வருவாரா?
விஜய்யை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் ரசிகர்கள்
சென்னை: "யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும்.. விஜய் அரசியலுக்கு வர வேண்டும்" என்று தேனியில் போஸ்டர் ஒட்டி உள்ளனர் ரசிகர்கள்..!
இந்த வருடம் அரசியல் வருகையில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்யும் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.. விஜய் இந்த தமிழ்நாட்டை நாட்டை ஆள வேண்டும் என்பது அவரது அப்பாவின் ரொம்ப வருஷ ஆசை..
ஆனால், அதற்கு பிடிகொடுக்காமல் விஜய் விலகி வந்தாலும், தற்போதைய சூழல் அவருக்கு சாதகமாக அமைந்து வருகிறது. ஒன்று ரஜினியின் அரசியல் விலகல் மற்றொன்று, விஜய்யின் தீவிர ரசிகர்கள்!

அரசியல்
ஒரு வருடமாகவே விஜய்யா ? ரஜினியா என்ற ஒரு பேச்சு மாறி மாறி எழுந்தது.. ரஜினி அரசியல் வருகைக்கு இணையாக விஜய்யின் வருகையும் சரிசமமாக ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.. மற்றொரு பக்கம், விஜய் அரசியல் பேச்சு எழும்போதெல்லாம் பாஜகவின் பேச்சும் சேர்ந்தே பயணித்து வருகிறது.. ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக விஜய்யை பிரச்சாரம் செய்ய வலியுறுத்தி அழுத்தம் தரப்படுவதாகவும் ஏற்கனவே செய்திகளும் கசிந்தன.

ரஜினிகாந்த்
ஆனால், பாஜகவுக்கே ரஜினி இப்போது ஷாக் தந்துவிட்டதால், அந்த முயற்சி இனி எடுபடாது என்றே நம்பப்படுகிறது.. அதேசமயம், விஜய் ஏன் இப்போது களத்தில் குதிக்க கூடாது என்று அவரது தரப்பில் ஆர்வமான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இதை விஜய்யின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியே தங்கள் விருப்பத்தை அழுத்தமாக தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் புத்தாண்டு பிறப்பையொட்டி தேனி மாவட்ட போஸ்டர் மறுபடியும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது..

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மறுத்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், "யார் அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். நாங்கள் யாரை நம்பியும் இல்லை. மக்களை நம்பித்தான். 2021 புதிய கட்சி துவங்க வேண்டும்." என்று விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதுமட்டுமல்ல, "நீங்கள் சினிமாவில் இருந்தால் ரசிகனாக இருப்போம். அரசியலுக்கு வந்தால் தொண்டனாக இருப்போம். எதுவும் இல்லையென்றால் உங்கள் தம்பிகளாக இருப்போம்... என்றும் நாங்கள் உங்களுடன்" என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர்கள் தேனி நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

போஸ்டர்
இதே தேனி மாவட்டத்தில்தான், கடந்த வாரம் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் மக்களின் கவனத்தை பெற்றது.. விஜய்க்கு எதிராக சீமான் ஒரு கருத்து சொல்ல, அதற்கு விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர்.. அப்போது இந்த தேனி மாவட்டத்தில், "அரசியல் நடிகர் சீமான்" என்ற தலைப்பில், அரசியல் ஆதாயத்திற்காக நடிப்பதாக கூறி மெகா சைஸ் போஸ்டர் ஒட்டினர். அதுபோலவே இப்போதும் விஜய் ரசிகர்கள், மறைமுகமாக ரஜினியை குறிப்பிட்டு, நேரடியாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
-
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications