"ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார்".. ஏன் சரத்குமார் வீட்டுக்கு போறதுதானே? நெட்டிசன்கள் கண்டனம்
சென்னை: முன்னாள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறியதற்காக பத்திரிகையாளர் பிஸ்மியின் அலுவலகத்திற்கு சென்ற ரஜினி ரசிகர்களுக்கு பலர் கண்டனங்களை குவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் விஜய்தான் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில்தான் இருக்கிறார் என தயாரிப்பாளர் தில் ராஜு பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார். இதை தில் ராஜு சொல்ல வேண்டும் என்றில்லை. மக்கள் விஜய்யை அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

ரஜினியின் சாதனைகள்
இதையடுத்து ரஜினியின் சாதனைகளை பட்டியலிட்டு அன்றும் இன்றும் என்றும் அவர்தான் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் 10 பேர் பத்திரிகையாளர் பிஸ்மியின் வீட்டுக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ரஜினி குறித்து யூடியூப்பில் அவர் பேசிய காணொலிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் கண்டித்தும் சிலர் ட்வீட் போட்டுள்ளார்கள்.

ரஜினி ரசிகர்களின் செயல் அற்பத்தனமானது
திரைத்துறையில் யார் முன்னணி? என்பது குறித்தான தனது மதிப்பீட்டை பதிவு செய்ததற்காக அண்ணன்
பிஸ்மி அவர்களது அலுவலகத்திற்குச் சென்று அச்சுறுத்த முனைந்த ரஜினி ரசிகர்களின் செயல் அற்பத்தனமானது! வன்மையானக் கண்டனத்திற்குரியது! என்கிறது இந்த பதிவு.

சூப்பர் ஸ்டார்
நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொன்னதற்காக ஊடகவியலாளர் பிஸ்மி அவர்களை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்களின் செயல் ஏற்கக் கூடியது அல்ல. விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொன்ன நடிகர் சரத்குமாரை இவர்கள் முற்றுகையிடுவார்களா? என இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டாரா
முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று ரஜினிகாந்த் அவர்களை குறிப்பிட்டதற்காக ஊடகவியலாளர்
பிஸ்மி அவர்களின் அலுவலகம் சென்று மிரட்டும் தொணியில் பேசியுள்ள ரஜினிகாந்த் ரசிகர்களுடைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிஸ்மி அவர்கள் குறிப்பிட்டதில் எந்த தவறும் இல்லை என்கிறது இந்த பதிவு

சரத்குமார் வீட்டுக்கு போயிருக்க வேண்டியதுதானே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை முன்னாள் Super Star என குறிப்பிட்டு பேசினார் என்று மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி வீட்டிற்கே சென்று ரஜினி ரசிகர்கள் சிலர் வாக்குவாதம் செய்துள்ளது தவறானது. பிஸ்மி அவர்களின் வீட்டுக்கு போனவங்க திரு.சரத்குமார் வீட்டுக்கு போய் கேட்டிருக்கலாமே என்கிறார் இந்த வலைஞர்.

சரத்குமார் பேசியது என்ன
முன்னதாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற நடிகர் சரத்குமார் பேசுகையில் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சூர்யவம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே நான் கூறிவிட்டேன் என பேசியிருந்தார். இதற்கு ரசிகர்கள் சமூகவலைதள பக்கங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். ஜெயிலர் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்று ரஜினிதான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்பதை அவர் நிரூபிப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications