அன்று மூச்சுவிடாமல் பாடிய ஆண் குயில்.. இன்று மூர்ச்சையாகி போன சோகம் #RIPSPB
சென்னை: மண்ணில் இந்த காதலன்றி எனும் பாடலை அன்று மூச்சு விடாமல் பாடிய ஆண் குயில், இன்று மூர்ச்சையாகி போனதை நினைத்து அவரது ரசிகர்கள் சோக கடலில் மூழ்கியுள்ளார்கள்.
எஸ்பிபி எனப்படும் ஆண் குயில், இதுவரை 45 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார். அவரது மறைவையொட்டி அவரது பாடல்கள் ஆங்காங்கே இசைக்கப்படுகிறது.
கர்நாடக இசை கலைஞர்கள், பாடகர்கள் அவரது பாடல்களை பாடி இசை அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் அவர் கேளடி கண்மணி படத்தில் மூச்சுவிடாமல் பாடிய பாடலை அனைவரும் நினைவுக் கூர்ந்து வருகிறார்கள்.

மண்ணில் இந்த
கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் ஒரு கடற்கரையில் ராதிகாவுக்காக மண்ணில் இந்த காதலன்றி பாடலை பாடியிருந்தார். மிகவும் ஹிட்டடித்த பாடல்களில் ஒன்று. அந்த பாடலில்...

ரத்தினங்கள்
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதற்கோர் பிறவி
இத்தனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா...

மூழ்கடித்தது
இசையில் இது போன்ற புதுமைகளை எல்லாம் புகுத்த முடியுமா என்பதை இந்த இசையுலகிற்கு காட்டினார். அப்படிப்பட்ட எஸ்பிபி, இன்று மூச்சுவிட சிரமப்பட்டு மாரடைப்பால் இறந்த செய்தி ரசிகர்களை கண்ணீர் கடலில் மூழ்கடித்துவிட்டது. இளையராஜாவின் இசையில் உருவானது இந்த பாடல்...

சங்கீத மேடை
அன்று மூச்சுவிடாமல் பாடிய எஸ்பிபி இன்று சங்கீத மேகத்தில் கரைந்துவிட்டதை நினைத்து ரசிகர்கள் மனமுடைந்து கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். இந்த பாடலுக்காகவே இந்த திரைப்படம் 285 நாட்கள் தியேட்டரில் ஓடியதாக ரசிகர்கள் நினைவுக்கூர்கிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications