‘போதிதர்மர் கிடைச்சிட்டாரு’.. பார்க்க சிரிப்பா இருந்தாலும் இந்த வீடியோ உண்மைதான் பாஸ்!
அமைச்சர் விஜயபாஸ்கரை போதிதர்மராக சித்தரித்து ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை போதிதர்மராக சித்தரித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோயினை எதிர்த்து போராட, இந்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை அமைச்சர் விஜயபாஸ்கர் சக்கரம் போல் சுழன்று தீயாக வேலை செய்து வருகிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழும் வகையில் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். இது அவருக்கு மட்டுமின்றி, தமிழக அரசுக்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் விஜயபாஸ்கருக்கு சமூக வலைதளங்களில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட தீவிர ரசிகர்கள் சிலர் சூர்யாவின் ஏழாம் அறிவு படக்காட்சிகளை வைத்து வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஏழாம் அறிவு காட்சி
அதில் சூர்யாவின் மூளையை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என டோங்லி, தனது குருவிற்கு போன் செய்து சந்தேகம் கேட்கும் காட்சியை தற்போதைய சூழலுக்கு தகுந்த மாதிரி அப்படியே உல்டாவாக்கியுள்ளனர். அதன்படி டோங்லி தான் கொரோனா. சீனாவுக்கு போன் செய்து, இந்தியாவில் தன்னால் ஒரு மாநிலத்தை மட்டும் தாக்க முடியவில்லை என்கிறார்.

போதிதர்மர்
அதற்கு அவரது குரு, அது விஜயபாஸ்கரின் மாநிலம். அங்கு ஒன்றும் செய்ய முடியாது. மீண்டும் வந்துவிடு என அறிவுறுத்துகிறார். அதன்பிறகு போதிதர்மரின் முகத்தில் விஜயபாஸ்கரின் முகத்தை ஒட்டவைத்து, சீனக்குழந்தையை குணப்படுத்தும் சீனை வைத்திருக்கிறார்கள்.

வைரல் வீடியோ
இதை பார்க்கும் போது ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும், மறுபக்கம் பம்பரமாக சுற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மக்கள் கொடுத்த பரிசாகவே இந்த வீடியோ தோன்றுகிறது. வழக்கம் போல் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிவிட்டரில் அப்டேட்
மக்கள் மத்தியில் வீண் குழப்பங்களை தவிர்க்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் தினமும் உடனுக்குடன் கொரோனோ பற்றிய அப்டேட்டுகளை விஜயபாஸ்கர் வழங்கி வருகிறார். அதோடு தமிழகத்தில் கொரோனோ பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications