ஏ.ஆர் ரகுமான் இசை கச்சேரி: ஏற்பாடே சரியில்லை..வந்துவிட்டு புலம்பியபடி ஏமாற்றத்துடன் சென்ற ரசிகர்கள்
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு எந்த ஒரு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை என்று விழாவுக்கு வந்த ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டு சோகத்துடன் திரும்பி சென்றனர்.
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி மாலை சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் உள்ள ஆதித்யராம் பேலஸ் என்ற பகுதியில் "மறக்குமா நெஞ்சம்" என்ற தலைப்பில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடக்க இருந்தது. கடைசி நேரத்தில் இந்த இசை நிகழ்ச்சி மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது குறித்து ஏ.ஆர் ரகுமான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட்ருப்பதாவது:-

"எனது அன்பான நண்பர்களே, வானிலை மோசமாக இருப்பதினாலும், தொடர் மழையின் காரணமாகவும், எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்தும், அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படியும் இன்று நடக்கவிருந்த இசை கச்சேரி வேறொரு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். மேலும் நமது உடல் நலமே முக்கியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம் இசைக்கச்சேரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வெள்ளி, தங்கம், வைரம், பிளாட்டினம் என ரூ.2000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் இசைக்கச்சேரி நடைபெறும் இடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. எந்த ஒரு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. பார்க்கிங் வசதியில்லை. சேர் வசதியில்லாமல் பல ரசிகர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பல மணி நேரம் க்யூவில் நிற்க வேண்டியதாகிவிட்டது. குறிப்பாக ஈசிஆர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஏ.ஆர் ரகுமான் கச்சேரியை பார்க்க கார்களில் வந்த பலரும் பார்க்கிங் வசதி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி விடப்பட்டதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஒரு சிலர் போலீசாரிடம் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டதை காண முடிந்தது.
இவ்ளோ பணம் கொடுத்து டிக்கெட் வாங்கி சும்மா போக சொல்றீங்களே என ஆதங்கத்துடன் ஒரு ரசிகை மனக்குமுறலை வெளிப்படுத்தி சென்றார். எந்த ஒரு ஏற்பாடும் சரியில்லை விழாவுக்கு வந்த ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி விட்டு சோகத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் டிரெண்டிங் ஆகி வருகின்றன.












Click it and Unblock the Notifications