அசம்பிளில வச்சு செய்றேன்.. 3.3 லட்சம் கோடி முதலீடு, 2 லட்சம் ஜாப் அவுட்! திமுகவை சாடிய தவெக அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு விழாவில் தமிழக அமைச்சர் கீர்த்தனா பேசும்போது, கடந்த திமுக ஆட்சியை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியுள்ளார். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய கமிஷன் மற்றும் லஞ்சக் கலாச்சாரத்தால் தமிழகத்திற்கு வரவேண்டிய பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மற்றும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் அடியோடு பறிபோய்விட்டதாக அவர் மிக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த வாரம் அமைச்சர் கீர்த்தனா ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது ஆந்திராவுக்குத் தொழில் முதலீடுகள் மாற்றப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்..

TVK Minister Keerthana

தவெக அமைச்சர் கீர்த்தனா

அதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, "தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்று வெறும் 30 நாட்களே ஆவதால் இவ்வளவு குறுகிய காலத்தில் எந்தவொரு முதலீடும் மாநிலத்தை விட்டு வெளியேற வாய்ப்பில்லை, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நிலவிய தவறான அணுகுமுறைகள் மற்றும் கமிஷன் கலாச்சாரத்தால் மட்டுமே அந்த நிறுவனங்கள் ஆந்திராவுக்குச் சென்றுள்ளன. இதற்கான ஒட்டுமொத்த ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் இதுகுறித்து கேள்வி எழுப்பினால், அவர்கள் வாயடைத்துப் போகும் வகையில் சட்டமன்றத்திலேயே உரிய ஆதாரங்களுடன் தகுந்த பதிலடி கொடுப்பேன்.

திமுக டிஆர்பி ராஜா

இந்த விவகாரத்தில் முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தற்போதைய அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்னும் பழைய நினைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. தங்களது பண்ணையார்தனத்தை விட்டுவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக அரசுக்கும், பொதுமக்களுக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்" என்றெல்லாம் கடுமையாக விமர்சித்திருந்தார்

இந்நிலையில், விருதுநகர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீர்த்தனா பேசும்போது மீண்டும் திமுகவுக்கு பதிலடி தந்துள்ளார்.. அதில், "கடந்த திமுக ஆட்சியில் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றால் அதற்கு முன்பாக தனியாக 23 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை கமிஷன் வாங்கி பையில் வைத்துவிட்டுத்தான் மறுவேலையே பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு அவலநிலைதான் கடந்த ஆட்சியில் நீடித்தது.

தொழில் முதலீடு

ஆனால், இன்றைக்குத் தமிழகத்தில் லஞ்சமே இல்லாத, "ஜீரோ கரப்ஷன்" மாடல் ஆட்சியை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பவர்கள் நாம் தான். அப்படிப்பட்ட தூய்மையான நிர்வாகத்தைத் தரும் நம்மைப் பார்த்து அவர்கள் கேள்வி கேட்கிறார்களா?

திமுகவின் 50 ஆண்டுகால சாம்ராஜ்ஜியத்தை, நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 30 நாட்களில் முற்றிலும் அழித்துத் துவம்சம் செய்து காட்டியிருக்கிறோம். தமிழகத்தில் பல்கிப் பெருகித் தலைவிரித்தாடிய இந்த டெண்டர் மாஃபியாவை வேரோடு அழித்து நாம் சாதனை படைத்துக் காட்டியிருக்கிறோம்.

வரிப்பணத்தை சுருட்டி

அதுமட்டுமல்லாமல் நம்முடைய ஆட்சியை ரீல்ஸ் ஆட்சி என்று அவர்கள் மிகக் கேலியாக விமர்சனம் செய்கிறார்கள். நான் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வாயிலாக ஒரு வீடியோவை வெளியிட்டேன். அதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாகக் கிண்டல் செய்து, கலாய்த்துப் பேசினார்கள்.

நான் கேட்கிறேன், கடந்த ஆட்சிக் காலத்தில் மக்களின் வரிப் பணத்தைச் சுருட்டி, மக்கள் பணத்தில் நீங்கள் குடும்பம் குடும்பமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தீர்களே, அப்பொழுது உங்களுக்கு இந்த மக்கள் வரிப் பணம் பற்றித் தெரியவில்லையா?

தமிழகத்தில் முதலீடு

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில், தொழில் தொடங்க வந்த நிறுவனங்களிடம் மிகக் கொடூரமாகக் கமிஷன் கேட்டுக் கொடுமைப்படுத்திய காரணத்தால், தமிழகத்தில் முதலீடு செய்ய ஆசையோடு வந்த 25 முன்னணி நிறுவனங்கள் இங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன.

இதனால் தமிழகத்திற்கு மிக எளிதாகக் கிடைத்திருக்க வேண்டிய ரூ.3.3 லட்சம் கோடி மதிப்பிலான பிரம்மாண்ட தொழில் முதலீடுகளும், அதன் மூலம் நம் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கிடைத்திருக்க வேண்டிய 2 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகளும் ஒட்டுமொத்தமாகப் பறிபோய்விட்டன. தமிழ்நாட்டு இளைஞர்களின் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு இழப்பிற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்? என்று அமைச்சர் கீர்த்தனா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+