அரசு ஊழியர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி! சம்பளமும் எகிறுது.. சலுகையும் உயருது.. சர்ப்ரைஸ் தந்த தமிழக அரசு
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளது தமிழக அரசு.. இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், சம்பளம் வழங்கப்படுகிறது. இந்திய நகரங்கள், எக்ஸ் (X), ஒய் (Y), இசட் (Z) என்று 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 27, 18, 9 சதவீதம், அவர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து கணக்கிட்டு, வீட்டு வாடகைப்படி வழங்கப்பட்டது.
மாதங்கள்: 2 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், 4 சதவிகித அகவிலைப்படியை அதிகரித்து, மேலும் சில அலவன்சுகளும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன. இதில் ஊழியர்களுக்கான HRA அதிகரிக்கப்பட்டது.. இந்த HRA என்பது, அரசு ஊழியர்கள் வசிக்கும் நகரத்தை பொறுத்து அமைவதாகும்..
அதாவது, X-வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் அதிகபட்சமாக 27 சதவிகித HRA -ஐ தற்சமயம் பெற்று வருகிறார்கள்... HRA அதிகரிப்புக்கு பிறகு, இது 30 சதவீதமாக உயரக்கூடும்..
வீட்டு வாடகை: அதேபோல, அடுத்த வகையான Y-வகை நகரங்களில், இதுவரை பணியாளர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவு 18 சதவீதமாக உள்ள நிலையில், 20 சதவிகிதமாக இனி அதிகரிக்கக்கூடும்.. Z பிரிவு ஊழியர்களுக்கு 9 சதவிகித வீட்டு வாடகை கொடுப்பனவு உள்ள நிலையில், இனிமேல் 10 சதவிகிதமாக உயரக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குட்நியூஸ் ஒன்றினை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது.. அதாவது, மத்திய பணி தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, வீட்டு வாடகைப்படியை, 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்த்தி, ஜனவரி 1 முதல் கணக்கிட்டு ரொக்கமாக வழங்க உத்தரவிட்டிருக்கிறது.
வீட்டு வாடகைப்படி: தற்போது வீட்டு வாடகைப்படியை, முறையே 30, 20, 10 சதவீதம் என, மத்திய அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில், தமிழக அரசின் மத்திய தொகுப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, வீட்டு வாடகைப்படியை உயர்த்தி, கடந்த ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை மட்டும் X வகை நகர பட்டியலில் உள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications