பனங்கிழங்கு பசித்தவனுக்கு.. "கள்" இறக்க உரிமம் வேணும்.. முதல் கூட்டத்திலேயே கோட்டை வரை போன கோரிக்கை
சென்னை: பனை மரத்தில் இருந்து "கள்" இறக்க உரிமம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பனைமர தொழிலாளர்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர மேலும் சில கோரிக்கைகளை அரசுக்கு விடுத்திருக்கிறார்கள்.
பனங்கிழங்கில் வைட்டமின் B, C நிரம்பியுள்ளது.. 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகள் உள்ளன.. 1 கிராம் புரதம், 21 கிராம் கார்போஹைட்ரேட், 77 கிராம் நீர்ச்சத்து உள்ளது.. பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளதால்தான், உடல் பலவீனமாக இருப்பவர்கள், இந்த கிழங்கை சாப்பிடுவார்கள்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்..

இந்த கிழங்கு ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்கக்கூடியது.. ரத்த சோகையை விரட்டக்கூடியது. அதிக நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாகிறது.
பனங்கிழங்கு: விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது பனங்கிழங்கு... பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், இந்த கிழங்குக்கு பெரும் பங்கு உண்டு. ரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுப்பதால், இதய நோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது.. கால்சியம் நிரம்பியிருப்பதால், எலும்பு பாதிப்பை குறைக்கிறது.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானமாகும்.. பதனீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.
கருப்பட்டி: பதனீரை இறக்கி அதை காய்ச்சினால் கருப்பட்டியாகிறது.. 100 கிராம் கருப்பட்டியில் புரோட்டின் 1.04 கிராமும், சுண்ணாம்பு சத்து 0.86 கிராமும், சுக்ரோஸ் 76.86 கிராமும் உள்ளது. பெண்களுக்கு கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த பிறகு லேகியம் தயாரிக்கவும் கருப்பட்டி பயன்படுகிறது.
இப்படி பனங்கிழங்கில், பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும். பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக இருந்தாலும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. பெரும்பாலான பனைமரங்களை வெட்டி அழித்து விட்டார்கள். பனை ஏறுவதற்கு தொழிலாளர்கள் கிடைக்காததும், பனை ஏறும் தொழிலை மக்கள் கவுரவ குறைச்சலாக நினைப்பதுமே இதற்கு காரணமாகும்.
மாநாடு: இப்படிப்பட்ட சூழலில், கள்ளுக்கடை திறக்க வேண்டும், பதநீர் இறக்கும் பனைமர தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் கைது செய்யக்கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கல்பாக்கம் அடுத்த முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கனகபுரீஸ்வரர் கோயில் அருகில் கிராமணி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முதல் மாநில மாநாடு அதன் மாநில தலைவர் கே.வி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு நிலதரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை வி.என்.கண்ணன், முகையூர் கண்ணன், உதயகுமார், சிவகண்ணன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர் என 1000க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். இதில் முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன..
மணிமண்டபம்: குறிப்பாக, கள் இறக்க அனுமதி, அதை பதப்படுத்தி வைக்க குளிரூட்டும் மையம், அரசு சார்பில் ம.பொ.சிக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், ம.பொ.சி பெயரில் அரசு விருது கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் கள்ளுக்கடை திறக்க வேண்டும், பதநீர் இறக்கும் பனைமர தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களை போலீசார் கைது செய்யக்கூடாது, பனை, தெண்ணை மரங்களில் இருந்து தொழிலாளி விழுந்து இறந்தால் அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், பதநீர் மதிப்புகூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழில் கூடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை முன்வைத்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
உரிமம் வேண்டும்: இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு பேசும்போது, " காமராஜரும்- ம.பொ.சி யும் நாணயத்தின் இரு பக்கங்கள் ஆவர்.. எனவே, விரைவில் ம.பொ.சிக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்... அண்டை மாநிலங்களில் கள் இறக்க அரசு உரிமம் வழங்கியது போல் தமிழக அரசும் கள் இறக்கும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications