ரூ.1 நோட்டு இருக்கா? அப்ப ரூ.7 லட்சம் சம்பாதிக்கலாம்.. அப்படியென்ன ஒரு ரூபாயில் ஸ்பெஷல்? போலி தகவல்?
சென்னை: 1 ரூபாய் நோட்டு இருந்தால் 7 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்பது போன்ற கவர்ச்சி விளம்பரங்கள், மீண்டும் சோஷியல் மீடியாவில் வட்டமடிக்க துவங்கியிருக்கின்றன. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும், பழைய நாணயங்களுக்கும், ரூபாய் நோட்டுகளுக்கும் ஆன்லைன் சந்தையில் கிராக்கிகள் அதிகரித்தவாறே உள்ளதாம்.
தற்போதைய காலகட்டத்தில், விரைவாக பணம் சம்பாதிக்க ஆன்லைனில் எத்தனையோ வழிகள் வந்துவிட்டன. அதில், ஒன்றுதான், பழைய நாணயங்கள், பழைய ரூபாய்களை ஆன்லைனிலேயே விற்பனை செய்வது.

விளம்பரங்கள்: இது சம்பந்தமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வெளியாகி கொண்டே உள்ளது. அதனால்தான், பழைய நோட்டுகள், நாணயங்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்சமயம், சில நாணயங்கள் புழக்கத்தில் இல்லையானாலும்கூட, அதற்கான மதிப்பும் பெருகி வருகிறது.
பழைய நாணயம், பழைய ரூபாய் நோட்டுக்கள் சேமிக்கும் பழக்கமுள்ளவர்கள், பல லட்சம் ரூபாய் தந்து இவைகளை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.. ரூ.2 நோட்டு, ரூ.10 நோட்டு, ரூ.5 நோட்டு, ரூ.50 நோட்டுகள், ரூ.2 நோட்டுகளை விற்பனை செய்யலாம். ஒரு பைசா நாணயம், 5 பைசா நாணயம், 25 பைசா நாணயம் போன்ற நாணயங்களையும் இப்படி ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
ரூபாய் நோட்டுக்கள்: ஆனால், எல்லாவகையான நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களையும் ஆன்லைனில் விற்க முடியாது.. இதற்கென ஒருசில அடையாளங்கள் இருந்தால் மட்டுமே அவைகளை சந்தைகளில் விற்க முடியும். அதேபோல, இவைகளை விற்பதற்காகவே காயின் பஜார் போன்ற குறிப்பிட்ட சில தளங்கள் உள்ளன.
அந்தவகையில், ஒரு ரூபாய் நோட்டு இருந்தாலும் அதனை ஆன்லைன் சந்தையில் 7 லட்சம் ரூபாய்க்கு விற்கலாம். 30 வருடம் முன்பே ரூ.1 நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், கடந்த 2015 முதல் ரூ.1 நோட்டுகள் மறுபதிப்பு செய்யப்பட்டன.
பழமை நோட்டுகள்: இந்த ரூ.1 நோட்டுக்கள் பிரிட்டிஷ் காலத்தில் அச்சிடப்பட்டதாகும். சுதந்திரத்துக்கு முன்பேயே, அதாவது 1935-ல் இந்த 1 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன.. அப்போது அச்சடிக்கப்பட்ட பழமை வாய்ந்த நோட்டு இருந்தால் மட்டுமே, இப்போது சந்தையில் விற்பனை செய்ய முடியும்.
பழமையான 1 ரூபாய் நோட்டு என்பதால், இதற்கு படுகிராக்கி ஏற்பட்டுள்ளது.. காயின் பஜார், கலெக்டர் பஜார் போன்ற தளங்களில் இந்த நோட்டுக்களை வாங்கி, விற்கலாம். அதேபோல, பிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் கிடைக்கின்றன.. ஆன்லைனில் விற்க வேண்டுமானால் காயின் பஜார் அல்லது குயிக்கர் போன்ற வெப்சைட்களில் விற்கலாம். ஆன்லைனில் இந்த அரியவகை நோட்டுகளுக்கு இருக்கும் டிமாண்ட் மற்றும் கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்கும்.
நாணயங்கள்: இப்படி நாணயங்களை விற்பனை செய்வது சட்டபூர்வமானது தான் என்றாலும், நீங்கள் விற்கும் தளத்தின் விதிமுறைகளை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களை விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி ஆதரிக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக அனுமதிப்பதுமில்லை.. எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் மட்டுமே கவனமாக செயல்பட வேண்டும்.












Click it and Unblock the Notifications