"வெட்கம் முளைக்குது, வெப்பமடிக்கிது".. கூலிங்கிளாஸுடன் அமைச்சர் குத்தாட்டம்.. பூரித்துபோன புதுச்சேரி
வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா நடனமாடி உள்ளார்
சென்னை: ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. அதை பார்த்த புதுச்சேரி மக்கள் மூக்கின் மீது விரலை வைத்து, பூரிப்புடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து வருகிறார்கள்..!
புதுச்சேரி மாஜி அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா.. 31 வயதுதான் ஆகிறது.. இவருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு(தனி) சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

சந்திர பிரியங்கா
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது... புதுச்சேரி அமைச்சரவையில் சுமார் 40 வருடங்களுக்கு பிறகு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றது இதுவே முதல்முறையாகும்.. நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரியில் உள்ள காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த நெடுங்காடு தொகுதியின் உறுப்பினர் சந்திர பிரியங்காதான் அந்த பெருமையை தட்டி சென்றார்..

பாதுகாப்பு
தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை மிகவும் சிறப்பாகவே கவனித்து வருவதாக மிக குறுகிய காலத்தில் இவர் பெயரும் எடுத்துள்ளார்.. இதற்கு காரணம், சட்டமன்றத்தில் இவர் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றும் பெரும் வரவேற்பை பெற்றதுதான்.. பெண்களுக்கு இலவச பிங்க் பஸ், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய சிசிடிவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சட்டமன்றத்தில் அறிவித்திருந்தது, புதுச்சேரி மக்களின் கவனத்தை பெற்றது..

நன்மதிப்பு
அதுமட்டுமில்லாமல் இவர் திடீர் திடீரென நேரடி ஆய்வுக்கு கிளம்பி சென்றுவிடுவார்.. பொதுமக்களிடம் நெருங்கி பழகி, அவர்களின் குறைகளை கேட்பார்.. இதன்மூலம் மேலும் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார் இந்த இளம் அரசியல்வாதி.. இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. தன்னுடைய உறவினரின் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் சந்திர பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்..

செம டான்ஸ்
ஃபுல் மேக்கப்பில் அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றுள்ளார்.. அப்போது மேடையில் உறவினர்களுடன் இணைந்து ஒரு சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.. கையில் பூ வைத்து கொண்டு, கூலிங்கிளாஸுடன் மினிஸ்டர் ஆடிய இந்த கூல் டான்ஸ் ஆடுகிறார்.. பொதுவாக, பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும் சீரியஸாகவே இருப்பார்கள்.. அதற்கு நேர்மாறாக, எந்தவித பந்தாவும் இல்லாமல், "புதுசா ஒரு வெட்கம் முளைக்குது.. புடிச்சா ஒரு வெப்பமடிக்கிது.. வேட்டி ஒண்ணு சேலையத்தான்.. கட்டி கிட்டு சிக்கி தவிக்கிது" என்ற பாடலுக்கு சந்திர பிரியங்கா ஆடிய டான்ஸ், இணைத்தில் ஷேர் ஆகி கொண்டே இருக்கிறது..!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications