"அந்த நொடி".. உதயநிதி சொன்னதுமே, அதிர்ந்த அருள்நிதி.. வெடித்து சிரித்த துரை.. "ஈரநினைவில்" கோபாலபுரம்
சென்னை: திமுக உடன்பிறப்புகள் நேற்று முதல் படுஉற்சாகமாக காணப்படுகிறார்கள்.. அதிலும், மதுரை திமுகவோ, திக்குமுக்காடிப்போயுள்ளது.. என்ன காரணம்?
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்... வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான முக அழகிரி, முதல்வர் ஸ்டாலின், முக தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து வந்து பார்த்து செல்வது வழக்கம்.

கலைஞர் இல்லம்: இந்தநிலையில் நேற்றைய தினம், தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீடே களைகட்டியிருந்தது.. கலைஞர் இல்லம் ஜெகஜோதியாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீட்டில் குடும்பத்தினர் எல்லாருமே ஒன்று சேர்ந்து இந்த பிறந்தநாளை கொண்டாடினார்கள்...
இதில் முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணன் அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர்.. இந்த பிறந்தநாள் விழாவை பொறுத்தவரை, 3 வகையான காட்சிகள், கருணாநிதி குடும்பத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த திமுக தொண்டர்களுக்கும் மிகுந்த குஷியையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது. அது தொடர்பான வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்கள்.

முக அழகிரி: முதல்வர் ஸ்டாலினும், அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொண்ட தருணம், கோபாலபுரத்தில் நேற்று நடந்துள்ளது.. இவர்கள் 2 பேரும் எப்போது பேசுவார்கள், அதற்கான சந்திப்பு எப்போது நடக்கும் என்று சில காலங்களாகவே எதிர்பார்ப்பு எழுந்தது.. மதுரை செல்லும்போதெல்லாம், தன் அண்ணனை முதல்வர் சந்தித்துவிடமாட்டாரா? என்று அழகிரியின் ஆதரவாளர்கள் ஏங்கி கிடந்தனர்..
சமீபத்தில் உதயநிதி, அன்பில் மகேஷூடன் அழகிரி வீட்டுக்குள் நுழைந்து ஆசி பெற்றபோது, மிகப்பெரிய நம்பிக்கை அழகிரி ஆதரவாளர்களிடம் சூழ்ந்தது. இதையடுத்து, எப்போது வேண்டுமானாலும், அண்ணன் - தம்பி சந்திப்பு நடக்கலாம் என்ற கனத்த நம்பிக்கையும் பெருகிவந்தது.. ஏற்கனவே மதுரை திமுகவில் உட்கட்சி மோதல் நிலவிவரும் சூழலில், எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், அழகிரியை அல்லது அவரது மகன் துரையை முன்னிலைப்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையும் துளிர்த்தபடியே இருந்தது.

ஒரே போடு: நேற்று உதயநிதி செய்தியாளர்களிடம் பேசும்போது, அழகிரி குறித்து கேட்டபோது, என் அப்பாவும் - பெரியப்பாவும் பேசிட்டுதானே இருக்காங்க.. அடிக்கடி பேசிக்குவாங்களே? அவங்களுக்குள் இடைவெளி என்று யார் சொன்னது? என்று ஒரே போடாக போட்டதுடன், சகோதரர்களின் சந்திப்பு மற்றும் உரையாடலை உறுதிப்படுத்தியும், வெளிப்படுத்தியும் இருந்தார்.
ஸ்டாலினும், அஞ்சாநெஞ்சன் அழகிரியும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம்.. இந்த செய்தி ஒட்டுமொத்த திமுகவையும் குளிர வைத்து வருகிறது.
துர்கா ஸ்டாலின்: அதேபோல, மற்றொரு வீடியோவில், திமுக எம்பி கனிமொழி, தன்னுடைய அண்ணி துர்கா ஸ்டாலினுடன் பேசிக்கொண்டே, அவரை அழைத்து கொண்டு கோபாலபுரம் வீட்டிற்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.. இவர்கள் இருவரும் ஒன்றாக சந்தித்து கொள்ளும் தருணங்கள் அதிகமாக இருக்கும் என்றாலும், அவை பொதுமக்களின் பார்வைக்கு அரிதாகவே இருந்தது.. அந்தவகையில், நேற்றைய தினம், இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே, வீட்டிற்குள் சென்றது, காண்போரை ஈர்க்க செய்தது.
இதில் ஹைலைட்டே, அருள்நிதி, உதயநிதி, துரை தயாநிதி என 3 சகோதரர்களுமே கோபாலபுரம் வீட்டில் பேசிக்கொண்டிருந்த தருணங்கள்தான்.. இந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.. 3 பேருமே ஓடியாடி விளையாடிய தங்களுடைய தாத்தா வீட்டில், கேஷூவலாகவும், நெருக்கமாகவும், இணக்கமாகவும், பரஸ்பரம் பகிர்ந்து பேசிக்கொண்டது, காண்போரை ஈர்த்து விட்டது.
ஹைலைட்: 3 பேருமே இப்போது ஆளுக்கொரு பக்கம் பிஸியாக இருந்தாலும், இவர்களை ஒன்றாக சேர்த்து காண்பது அரிதாக இருந்த நிலையில், நேற்று அந்த இடைவெளி நொறுக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் அங்குமிங்கும் ஓடியாடி பரபரப்பாக காணப்பட்டனர்.. உதயநிதி வழக்கம்போல் கேஷூவல் டிரஸ்ஸிலும், தயாநிதி, அருள்நிதி பட்டுவேட்டியிலும் மின்னினார்கள்.. உதயநிதி ஏதோ ஜோக் அடிக்க, அதற்கு அருள்நிதியும், தயாநிதியும் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தனர்.
கோபாலபுரம் வீடு, என்பது வெறும் செங்கலால் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல, அது அன்பான உள்ளங்கள், உள்ளன்போடு வாழும் அன்பு இல்லம் என்பதை கருணாநிதியின் பேரன்கள் நேற்றைய தினம் மீண்டும் நிரூபித்துவிட்டனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications