தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா? இந்த "கன்பார்ம் டிக்கெட்" இருக்கே? ரயிலில் இனி ஈஸியா போலாமே.. செம
சென்னை: தட்கலில் நொடியில் தீர்ந்துவிடுகிறதா புக்கிங் ? அப்படியானால், பயணிகளின் வசதிகளுக்காகவே, இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கும் கன்பார்ம் டிக்கெட் செயலி பற்றி தெரியுமா? இதில் எப்படி டிக்கெட்டை புக்கிங் செய்ய வேண்டும் தெரியுமா?
ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவருக்காகவே, புதிய செயலியை ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.. இதன்மூலம் கன்ஃபார்ம் டிக்கெட்டை உங்களால் எளிதாக பெற முடியும்.. இதற்கு ஆன்லைனிலேயே டிக்கெட்டை புக் செய்யலாம். எனவேதான் இந்த செயலியின் பெயரே "கன்பார்ம் டிக்கெட்" (confirm tkt) ஆகும்.

டிக்கெட்: ஒரே நேரத்தில் நிறைய பேர் IRCTC ஆப் மூலமாக தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வதால், பலருக்கும் இதில் டிக்கெட் கிடைப்பதில்லை.. ஆனால், இந்த கன்பார்ம் டிக்கெட் ஆப் மூலமாக குறிப்பிட்ட வழித்தடத்தில் இயங்கும் ரயில்களில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தட்கல் ஒதுக்கீட்டின்கீழ் கிடைக்கும் சீட்டுகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.. இதன் மூலம் எளிதாகவும் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம்.
இதனால், வெவ்வேறு ரயில் நம்பர்களை பதிவிட்டு கிடைக்கக்கூடிய சீட்டுகளை தேட வேண்டிய அவசியமில்லை.. ஒரே நேரத்தில், அதே ரூட்டில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் கிடைக்கும் டிக்கெட் விவரங்களையும் நீங்களே பார்க்க முடியும். எளிதாக டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் மட்டுமல்ல, ரயில் எண், பிஎன்ஆர், ரயில் அட்டவணை போன்ற தகவல்கள் ConfirmTicket செயலியில் கிடைக்கும்.
புக்கிங்: செல்போன் ஆப் மூலம் "கன்பார்ம் டிக்கெட்" ஆப்பில் எப்படி டிக்கெட் புக் செய்வது தெரியுமா? இதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாண்டாலே போதும்.. ஒருசில நிமிடங்களிலேயே டிக்கெட் கிடைத்துவிடும்.
இதற்கு முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குள் நுழைந்து "கன்ஃபர்ம் டிக்கெட் ஆப்" என்ற செயலியை டவுன்லோடு செய்ய வேண்டும். பிறகு செயலிக்குள் சென்று, நீங்கள் எங்கே பயணம் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்..
பின்னர், பயணம் செய்யக்கூடிய நாள், உங்களுக்கான வகுப்பை தேர்ந்தெடுக்கவும்.. அடுத்ததாக, "Search" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.. இப்போது நீங்கள் பயணம் செய்ய விரும்பும் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களின் தகவல்களும் கிடைக்கும்.
டிக்கெட்: இந்த ரயில்களில் உங்களுக்கு ஏற்ற ரயில் எது? சீட் என்ன? என்ன வகுப்பு தேவை? என்பதையெல்லாம் தேர்வு செய்ய வேண்டும்... பிறகு, டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்.. இறுதியாக, உங்களுக்கு முன்பதிவு செய்யப்பட ரயில் டிக்கெட் குறித்த விவரம் செல்போன் மற்றும் மெயில் மூலம் உறுதி செய்யப்படும். இந்த சேவை தட்கல் டிக்கெட் முன்பதிவானது காலை 10 மணி முதல் திறக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications