தினமும் ரூ.87 கட்டினால், ரூ.11 லட்சம் அள்ளலாம்.. எல்ஐசியின் பெஸ்ட் பாலிசி.. சூப்பர் சேமிப்பு திட்டம்
சென்னை: பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, வரப்பிரசாதமாக அமைந்துள்ள எல்ஐசியின் சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு? இதன் பலன்கள் என்னென்ன?
எத்தனையோ தனியார் நிறுவனங்கள் காப்பீடு தந்துவந்தாலும், பலவருட காலமாக பொதுமக்களால் அதிகம் நம்பப்படுவது எல்ஐசி தரும் திட்டங்களைதான்... அரசின் பொதுத்துறை நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (Life Insurance Corporation - LIC) நிறுவனம், பொதுமக்களின் நன்மை கருதி, பல்வேறு காப்பீடுகளை வழங்கி வருகிறது...

பெண்கள்: முதலீடு: நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, கோடிக்கணக்கான மக்கள் எல்ஐசியில் முதலீடும், காப்பீடும் செய்திருப்பது, எல்ஐசியில்தான்.. அதற்கேற்றபடி, பொதுமக்களுக்காகவே புதுபுது சலுகைகளையும், திட்டங்களையும், செயல்படுத்தி வருகிறது எல்ஐசி நிறுவனங்கள் குடும்பத்தில் யாருக்காவது எதாவது பாதிப்பு ஏற்பட்டால், நமக்கு கை கொடுத்து உதவக்கூடியது இன்சூரன்ஸ்கள்தான். இதில் 2 வகையான பாலிசி பற்றி பார்ப்போம்.
எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் இதில் முக்கியமானது.. தனித்துவமான சேமிப்பு மற்றும் காப்பீட்டுத்திட்டமாகும்.. குடும்பத்திற்கு தேவையான நிதி பாதுகாப்பை இந்த திட்டம் வழங்குகிறது...
பாதுகாப்பு: குடும்பத்துக்கான சேமிப்பையும், பெண்களுக்கான வாழ்க்கைக்கான பாதுகாப்பையும் தரக்கூடியது எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம்.. பாலிசி காலத்தில் பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், அந்நேரத்தில் தேவையான நிதிப்பாதுகாப்பை இந்த திட்டம் வழங்கும்... அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை எளிமையாக கிடைக்க வழிசெய்யும்.
ஆதார் ஷீலா திட்டத்தின்கீழ், தினமும் வெறும் 87 ரூபாய் முதலீடு செய்தாலே போதும், 11 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.. 15 வருட பாலிசி காலத்தை தேர்வு செய்வதாக இருந்தால், இந்த திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை இருக்கும்.
அதேபோல பாலிசிதாரர் பாலிசி காலத்தை முழுமையாக முடித்தால், அவருக்கு முதிர்வு தொகையும் வழங்கப்படும்.. இதில் பாலிசி லோன் வசதியும் உள்ளது.. அதாவது பாலிசியை வைத்து நாம் 90% வரை கடனாகவும் பெற முடியும். அத்துடன் வரி பலன்களையும் இதில் நாம் பெறலாம்.
தகுதிகள் என்னென்ன: இந்த எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் பெண்கள் மட்டுமே இணைய முடியும். 8 வயது முதல் 55 வயது வரை இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்தில் இணையலாம். அந்தவகையில், 10 முதல் 20 வருடங்களுக்கு நாம் தொகையை செலுத்தலாம். பெண்கள் 70 வயதாகும் போது இந்த பாலிசி முதிர்வு பெறும்.
ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட்.. அட்ரஸ் ப்ரூப் - ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், மின்சாரக் கட்டணம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும்/அல்லது பாஸ்போர்ட்.. வருமானச் சான்று - வருமான வரி அறிக்கை அல்லது சேலரி சிலிப் போன்றவை இருந்தால் ஆதார் ஷீலா திட்டத்தில் இணையலாம்.
கன்யாதான்: எல்ஐசியின் இன்னொரு சிறப்பான பாலிசி, எல்ஐசியின் கன்யாதான் பாலிசி ஆகும்.. பெண் குழந்தைகளின் நலனுக்கானது இந்த பாலிசி.. அவர்களது எதிர்கால கவலையை பெற்றோர்கள், எளிதில் பூர்த்தி செய்யவே இந்த பாலிசி உள்ளது.. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நிதியுதவியை தரக்கூடிய திட்டம் இதுவாகும். இதன்மூலம், பெண் குழந்தைகளின் கல்வி அல்லது திருமண செலவுகளுக்கு உதவியை பெறலாம்..
இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் வெறும் ரூ. 75 மட்டுமே முதலீடு செய்தாலே போதும்.. வலுவான வருமானத்தை நீங்கள் எளிதாகவே பெறலாம். இந்த பாலிசியில் முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ. 14 லட்சம் கிடைக்கும்.
தகுதிகள்: இந்த திட்டத்தின்கீழ், குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்திற்கு இதில் காப்பீடு பெறலாம். முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.. அதேபோல, குழந்தையின் தந்தையின் வயது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 50 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். பெண் குழந்தையின் குறைந்தபட்ச வயது 1 வருடமாக இருக்க வேண்டும்...இந்த திட்டத்தின் பாலிசி காலம் 13 வருடம் முதல் 25 வருடமாகும்..
பிரீமியம் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் வரை இருப்பதுடன், பிரீமியம் செலுத்தும் விருப்பங்களும் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் உள்ளன. இந்த திட்டத்தில் காப்பீடு செய்த பெற்றோருக்கு விபத்து மூலம் மரணம் ஏற்பட்டால் உடனடியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்... இயற்கை மரணம் ஏற்பட்டால், ரூ.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.
முதிர்வு தேதி வரை ஒவ்வொரு வருடமும் ரூ.50,000 வழங்கப்படுகிறது. பாலிசி காலத்தின்போது தந்தை இறந்துவிட்டால், அடுத்த காலத்திற்கு குழந்தை பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்: கன்யாதான் பாலிசியை எடுக்க, பெண்ணின் தந்தையின் வயது குறைந்தது 18 வயதும் அதிகபட்சம் 50 வயதும் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, முகவரி ஆதாரம், பாஸ்போர்ட் அளவு போட்டோ, வருமான சான்றிதழ், மகளின் பிறப்பு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். பாலிசி தொடர்பான கூடுதல் தகவலுக்கு, இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://lifeinsuranceofindia.in/lic-kanyadan-policy/
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications