காசு வேணுமா? ரூ.20 ரூபாய் பழைய நோட்டு இருக்கா? லட்சக்கணக்கில் வருமானம் வருதாமே.. சூப்பர் ஆபர் இது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் இருந்தால் போதும்.. லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும் என்று சோஷியல் மீடியாவில் அடிக்கடி செய்திகள் பரவி ஆச்சரியத்தை கிளப்பி கொண்டிருக்கின்றன.. எப்படி தெரியுமா?

ரிசர்வ் வங்கி அடிக்கடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்து புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. மற்றொருபக்கம், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான ஆன்லைன் சந்தைகளும் தற்போது பெருகிவிட்டன..

Fantastic offer for online Income and do you have Old Rs20 note you can get easily 20 lakhs through website

நாணயங்கள்: உதாரணத்துக்கு, பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு இன்றும் மதிப்பு உள்ளது.. ஒரு ரூபாய் நாணயம் ரூ.10 கோடிக்கு ஏலம் போகுமாம்.. ஆனால் அது சாதாரண நாணயம் அல்ல. அந்த நாணயம் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்ததாக இருக்க வேண்டும்.. அதுவும், 1885ம் ஆண்டில் அச்சடிக்கப்பட்ட நாணயமாக இருந்தால் அதற்கு 10 கோடி ரூபாய் வரை கிடைக்குமாம்.

2 ரூபாய் நாணயங்களையும் இதுபோல விற்க முடியும்.. ஆனால், இந்த 2 ரூபாய் நாணயம், வெள்ளி நாணயமாகும். 1994 ம் ஆண்டு தேசியக் கொடியை பின்னணியில் வைத்து வெளியிடப்பட்டது. இந்த சிறப்பு நாணயத்தின் விலை Quikr இணையதளத்தில் ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

50 ரூபாய் நோட்டு: கடந்தவாரம்கூட, 50 ரூபாய் நோட்டு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பறந்தது.. இந்த பழைய 50 ரூபாய்க்கு டிமாண்டு கூடியிருக்கிறதாம். இந்த நோட்டு இருந்தால், ஆன்லைனில் 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை பணம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனால், பழைய 50 ரூபாய் நோட்டின் வரிசை எண் 786 ஆகவும், நோட்டின் முன்பக்கம் மகாத்மா காந்தியின் படமும் இருப்பது முக்கியமானதாகும்.. மேற்கண்ட பழைய நோட்டுக்கள் உங்களிடம் இருந்தால், அதை நீங்கள் விற்க விரும்பினால் Quikr என்ற வெப்சைட்டை அணுகலாம்.

சீரியல் நம்பர்: அதுபோலவே, 10 ரூபாய் நோட்டுக்களுக்கும் கிராக்கி உள்ளது. பழைய 10 ரூபாய் நோட்டுக்கள் இருந்தாலும் அதை வைத்தே சம்பாதிக்கலாம்.. இந்த 10 பழைய ரூபாய் நோட்டிலும் சீரியல் நம்பர்கள் இருக்கும்.. இந்த சீரியல் நம்பர் ரொம்ப ஸ்பெஷலானது.. அதுவும் ஜீரோ நம்பர் அதிகமாக இருக்கும் நோட்டுக்களுக்கு கிராக்கி அதிகம்.

அதைவிட முக்கியமாக, நம்பர் 9 அதிகம் கொண்ட 10 ரூபாய் நோட்டுக்களுக்கு கூடுதல் டிமாண்டு இருக்கிறதாம். பழைய 10 ரூபாய் நோட்டின் சீரியல் நம்பரில் 0 நம்பர் அதிகமாக இருந்தால் அந்த ரூபாய் நோட்டு அதிக விலைக்கு வாங்கப்படும்.. அதாவது, 10 ரூபாய் நோட்டுக்கள் தந்து, 10 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கலாம் என்கிறார்கள்.

இதற்காகவே , https://coinbazzar.com என்ற வெப்சைட் உள்ளதால், இந்த இணையதளத்திற்கு சென்று, 10 ரூபாய் நோட்டுகளை நீங்கள் விற்கலாம்.

வெப்சைட்கள்: அதுபோலவே, பழைய 20 ரூபாய் நோட்டுக்கள் இருந்தாலும் விற்கலாம். அந்த 20 ரூபாய் நோட்டின் முன் பக்கத்திலும் மகாத்மா காந்தி போட்டோ இருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, "786" என்ற நம்பர் அச்சிடப்பட்டிருக்க வேண்டுமாம்..

அத்துடன், இஸ்லாமிய மக்களிடையே 786 என்ற எண் மிகவும் புனிதமானதாக கருதப்படுவதால், இவற்றை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குவதற்கும் மக்கள் தயாராக உள்ளதாக, சோஷியல் மீடியா தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, OLX -ல் உங்களிடமுள்ள அரிய வகை 20 ரூபாய் நோட்டினை, விற்பனை செய்யலாம்.. இதற்கு 6 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்குமாம்.
எப்படி விற்பது: அந்தவகையில், 10, 20, 50 என எந்த பழைய ரூபாய் இருந்தால், அதனை ஆன்லைன் போர்ட்டல்களில் எளிதாக விற்கலாம். இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

- பழைய நோட்டுகளை விற்க முதலில் Quikr, coinbazzar, coin market portal அல்லது OLX என சம்பந்தப்பட்ட வெப்சைட் செல்லவும்.

- அந்த வெப்சைட்களில் நீங்கள் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்

- பிறகு உங்களது செல்போன் எண் மற்றும் உங்கள் ஐடி பதிவு செய்யப்பட வேண்டும்

- உங்களிடம் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளில் 2 பக்கமும் தெளிவாக போட்டோ எடுத்து, அதனை அப்லோடு செய்ய வேண்டும்

- இப்போது உங்களது விளம்பரத்தை பார்க்கும் நபர்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள்.

ஆனால், இந்த ரூபாய் நோட்டுகளுக்கு இருக்கும் அந்தநேரத்தில் இருக்கும் டிமாண்ட் + கஸ்டமர்களின் விருப்பத்தை பொறுத்தே பணம் கிடைக்குமாம்.. இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க கவனமுடன் நீங்கள் மட்டுமே செயல்பட வேண்டும். ஆனால், ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்வதையும், வாங்குவதையும் ரிசர்வ் வங்கி துளியும் ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+