"சிதறுதா" திமுக வாக்கு.. மூர்த்தி வீட்டில் அச்சாரம் போட்ட "விவிஐபிக்கள்".. மெயின் குறி திருமாவளவன்?
திருமாவளவனின் வாக்கு வங்கிகளுக்கு குறி வைத்து நகர்கிறதாம் தமிழக பாஜக
சென்னை: தமிழக பாஜக, அடுத்த அரசியல் வியூகத்தை கையில் எடுத்துள்ளது.. அத்துடன் திமுக மற்றும் விசிகவின் வாக்குகளுக்கும் குறி வைத்து அடுத்தக்கட்ட காய்நகர்த்தலை துவங்கி உள்ளது.. இதனால், கொங்கு மண்டல களம் அனலடிக்க துவங்கி உள்ளது.
வரும் எம்பி தேர்தலில் தமிழகத்தை குறி வைத்து, பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருகிறது.. அதிலும் 25 சீட்களை பெற்றே தீருவது என்று ஓபனாகவே சொல்லிவிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இது சாத்தியமா? இல்லையா? என்பது தெரியாது.. அதிமுகவுடன் கூட்டணியா? என்பதும் தெரியாது.. பாஜக தலைமையில்தான் கூட்டணியா? என்பதும் தெரியாது? இருந்தாலும், தமிழக அரசியல் கட்சிகளிலேயே முதல் நபராக களமிறங்கி உள்ளது தமிழக பாஜக..

அட்வைஸ் மோடி
6 மாதத்துக்கு முன்பேயே பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, தமிழக பாஜக நிர்வாகிகளிடம் 2 முக்கியமான விஷயங்களை பற்றி பேசியிருந்தார்.. "பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்... அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.. அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்துங்கள்.. திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்..

மலராத தாமரை
மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜகவுக்கு தமிழகத்தில் நிறைய ஆதரவை நேரடியாகவே நான் பார்க்கிறேன்.. இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது.. அதனால் தமிழகம் முழுக்க பூத் கமிட்டிகளை உடனடியாக நியமிக்க பாருங்கள்.. நமக்கான வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது" என்று பிரதமர் அறிவுறுத்திவிட்டு போனதாக தகவல்கள் வெளியாகின.. இதையடுத்து, மற்ற கட்சிகளைவிடவும், பூத் கமிட்டி மும்முரத்தில் தாமரை கட்சி முந்திக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்தது.

குறி வச்சாச்சு
இப்போது அடுத்தக்கட்டமாக, 7 தொகுதிகளை குறி வைத்து காய்நகர்த்தல்களை துவங்கி உள்ளனர்.. முதல்கட்டமாக கோவை, நீலகிரி மாவட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில், திமுகவின் ஆ ராசாவுக்கு போடப்படும் முட்டுக்கட்டையாக அல்லது முன்கூட்டியே தரப்படும் நெருக்கடியாக இந்த வியூகம் பார்க்கப்பட்டும் வருகிறது.. தேசிய தலைவர் நட்டாவின் கவனம் நீலகிரியில் குவிந்துள்ளதே இதற்கு காரணம்.. அதுமட்டுமல்ல, தலித் ஓட்டுக்களையும் குறி வைத்து, பாஜக தன் ஆட்டத்தை துவங்கி உள்ளதாக தெரிகிறது.

வீட்டு சாப்பாடு
சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் இணையத்தில் வட்டமடித்தது.. அதாவது, மத்திய பாஜகவின் திட்டங்கள் அனைத்தும், தகுதி இருந்தும்கூட, தமிழக மக்களுக்கு முழுமையாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டை, தமிழக பாஜக திமுக மீது முன்வைத்து வருகிறது.. எனவே, இத்தகைய திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதுடன், அதேசமயம், பட்டியலின சகோதர சகோதரிகளின் வீடுகளில் சாப்பிடுவது, பிறகு அவர்களையும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்து வயிறார சாப்பிட வைப்பது என்ற புது வியூகத்தை பாஜக முன்னெடுக்க போவதாக சொல்லப்பட்டது.

அச்சாரம்
நேற்றைய தினம் நட்டாவின் செயல்பாடுகள் அதற்கான அச்சாரத்தை போட்டுள்ளது.. அன்னூர் நல்லிசெட்டிபாளையம் அருந்ததியர் காலனியில் உள்ள பாஜக கிளை தலைவராக பணியாற்றி வரும் எஸ். மூர்த்தி என்பவரின் வீட்டுக்கு நட்டா சென்றார்... மூர்த்தியிடம் என்ன தொழில் செய்கிறீர்கள்? கட்சியில் எத்தனை வருஷமாக வேலை பார்த்து வருகிறீர்கள்? பூத் ஏஜெண்டாக பணியாற்றி இருக்கிறீர்களா? என்று நட்டா விசாரித்தார்.. பிறகு மூர்த்தி வீட்டில் டீ சாப்பிட்டார் நட்டா..

நயினார் டீ
மூத்த தலைவர்கள் எல்.முருகன், அண்ணாமலை, சி பி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் என எல்லாருமே மூர்த்தி வீட்டில் டீ குடித்துவிட்டு கிளம்பினார்கள். ஆக, சிறுபான்மையினரின் ஓட்டுக்களை முதலில் குறி வைத்தே பாஜக தன் தேர்தல் யுக்தியை கையில் எடுத்துள்ளது.. ஆ.ராசாவுக்கான எதிர்ப்பு அரசியல் என்றில்லாமல், திருமாவளவனின் வாக்கு வங்கி பலத்தை சிதறடிக்கவுமே பாஜக, இதுபோன்ற வியூகத்தை துவக்கி உள்ளதாக சொல்கிறார்கள்..

25 லோட்டஸ்
தங்கள் புது யுக்தியால், அடித்தட்டு மக்களிடமும் கால் ஊன்ற முடியும், தலித் வாக்குகளையும் அலேக்காக அள்ள முடியும் என்று கணக்கு போடுகிறதாம்.. அதுமட்டுமல்ல, இந்த வாக்குகள் தங்களுக்கு கிடைக்கிறதோ இல்லையோ, திருமாவளவனுக்கு போய்விடாமல் தடுப்பதற்கான முயற்சியாக இருக்கும் என்றும் பெரிதும் நம்புகிறதாம்.. ஒரு பக்கம் திமுகவை டேமேஜ் செய்துகொண்டே மறுபக்கம் இப்படியான யுக்திகளை செயல்படுத்தி வருவது, "தாமரைகளை" அதுவும் "25 தாமரைகளை" தமிகத்தில் இருந்து உருவாக்க உபயோகமாக இருக்குமா? தெரியவில்லை.. பார்ப்போம்...!!!
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications