அப்ப கிளம்பிடுங்க.. "உலை" வெச்ச எடப்பாடி.. என்னாது 8 முறையா.. அதைவிடுங்க.. அட சக்ஸஸ் செய்த "கிழக்கு"
எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று 8 தொடர் தோல்விகளை அதிமுக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.. இது திமுக கூட்டணி மற்றும் அதிமுக தரப்பில் 2 விதமான தாக்கங்களை தமிழக அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எப்படியும் 6 முனைப்போட்டி அமைய போவதாக கணிக்கப்பட்ட நிலையில், கடைசியில் 4 முனைப்போட்டி மட்டுமே முடிவானது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கின..

சுயேச்சைகள்
இதைதவிர, சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்... இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது... முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது... இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்க துவங்கிவிட்டார்.. அதாவது, முதல் சுற்றிலேயே அவர் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்... தொடர்ந்து 60 ஆயிரத்தை கடந்தும் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னுக்கு சென்றுள்ளார்.

டரியல் பிளான்
இது காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமல்ல, ஈரோடு தொகுதிக்கே ஒரு சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது. காரணம், ஒருங்கிணைந்த ஈரோடு சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்டு, கடந்த 2008-ல்தான் ஈரோடு கிழக்கு தொகுதி உதயமானது.. இதன் முதல் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2011-ல் நடந்தது.. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக 10,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 7794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெட்அவுட்
இப்படி 10 ஆயிரம், 8 ஆயிரம், 7 ஆயிரம் என வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக, திமுக 2 கட்சிகளும் இருந்தன. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை.. 60 ஆயிரம் வாக்கு என்பதெல்லாம் மிகப்பெரிய வித்தியாச எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது.. அந்த வகையில், மிக முக்கிய சாதனையை இந்த ஈரோடு கிழக்கு தொகுதி நடத்தி காட்டியுள்ளது.. இதற்கு நேர்மாறாக அதிமுகவை எடுத்துக் கொண்டால் தொடர் சறுக்கலை கண்டுள்ளது.. அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 8வது தோல்வி இதுவாகும்.. அதாவது, 2017-ல் தமிழக முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது முதலே இந்த தொடர் சறுக்கல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்..

கோட்டை விட்ட எட்டு
1. 2017 ஆர்கேநகர் இடைத் தேர்தல்.
2. 2019 நாடாளுமன்ற தேர்தல்.
3. 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல்.
4. ஊரக உள்ளாட்சி தேர்தல்.
5. 2021 சட்டமன்ற தேர்தல்.
6. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.
7. நகர்புற உள்ளாட்சி தேர்தல்.
8. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.

8 + 8
இப்படி 8 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்திருப்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு மிகப்பெரிய சோர்வை தந்துள்ளது.. ஏற்கனவே கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், எடப்பாடியின் பிடிவாதத்தினால், ஒருங்கிணைந்த அதிமுக என்பதே காணாமல் போனதை தொண்டர்களால் ஏற்க முடியாமல் உள்ளனர்.. இதுவே அதிமுக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால், திமுகவுக்கு செக் வைப்பதுபோல, வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கலாமே என்பதே அவர்களின் பொருமலாக உள்ளது. "கூட்டணி தர்மத்திற்கு உலை வைக்கிற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது" என்று ஏற்கனவே கேஎஸ் அழகிரி எடப்பாடியை சீறியிருந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட், தொண்டர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

அஸ்தி எடப்பாடி
"எடப்பாடி முதலமைச்சராக இருந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி. அதே 2019ல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி. அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களிலும் படுதோல்வி. இந்த படுதோல்விகள் அனைத்தும் எடப்பாடி முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. சரி இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் இதே எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தோல்வி என்பதோடு ஆட்சியையும் இழந்தோம்.

GetOutEPS
2021 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் போட்டியிடவே வேட்பாளர்கள் முன்வராத பரிதாப நிலை. இப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படு கேவலமான படு தோல்வி. ஆக பழனிசாமி வேலைக்கு ஆகாத வெத்து வேட்டு என்பதற்கு இவைகளே சாட்சி. இதற்கு மேலும் பொறுத்து இருந்தால் அண்ணா திமுகவின் அஸ்தி கூட அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது. எனவே ஓர் குரலாக ஒலிப்போம். #GetOutEps. அம்புட்டு தான்..." என்று பதிவிட்டுள்ளது, அதிமுக கூடாரத்தையே அசைத்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications