யார்னு பாருங்க.. ஒரே ஆச்சரியமா இருக்கே.. என்னங்க நடக்குது இங்கே.. குழப்பியடிக்குதே "சீன்"
கழுதையை சுமந்து கொண்டு பஸ் மீது ஏறும் நபரின் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகிறது
சென்னை: ஒரு வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. அந்த காட்சி உண்மையா? பொய்யா என தெரியாமல், நெட்டிசன்கள் குழம்பி போயுள்ளனர்..
இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும், இணையவாசிகளை கவர்ந்துவிடும்..

பிழியும் சோகம்
அதிலும், சமீபகாலமாகவே விலங்குகளின் வீடியோக்கள் மக்களை ஈர்த்து வருகிறது.. இந்த விலங்குகள் நம்மை சில சமயம் மனம்விட்டு சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன. சில சமயம் வியப்பில் ஆழ்த்திவிடுகின்றன. சில சமயம் அதிர்ச்சியில் உறையவும் வைத்துவிடுகின்றன.. சில சமயம் நெஞ்சை பிழியும் சோகத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதுபோன்ற விலங்குகளின் வீடியோகளுக்கு, சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது... இப்படித்தான் குரங்கு வீடியோக்கள் சில தினங்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது..

ஹய்யோ சோப்
அதிலும் ஒரு குரங்கு சோப்பு போட்டு துணிகளை துவைத்து கொண்டிருக்கிறது.. அதுவும் துணியை எடுத்து, தண்ணீரில் நனைத்து, அதற்கு சோப்பு போட்டு, பிறகு பிரஷ் போட்டு அழுக்குகளை தேய்க்கிறது.. பிறகு, துணி சோப்பை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, கையாலேயே கல்லில் அந்த துணியை அழுக்கு போகுமாறு அழுத்தி தேய்க்கிறது.. இன்னொரு குரங்கு நேராக, டாஸ்மாக் கடைக்குள் நுழைகிறது.. அங்குள்ள விஸ்கி பாட்டிலை ஓபன் செய்து, மடக் மடக்கென குடித்துவிட்டு, பாட்டிலை தூரப்போட்டுவிட்டு, அது பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கிறது..

ஷாக்கிங்
தினமும் தண்ணி அடிக்காமல் இந்த குரங்கு இருக்காதாம்.. இந்த குரங்கை விரட்ட வழி தெரியாமல், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல், அந்த டாஸ்மாக் கடைக்காரர் தலையில் கை வைத்து நொந்துபோய் இருக்கிறார். இதோ இன்னொரு வீடியோ வைரலாகிறது.. பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோ போலும்.. பொதுவாக, கழுதைகள் மனிதர்களை சுமந்து செல்லும்.,. அல்லது மனிதர்களின் பொதிகளை சுமக்கும்.. ஆனால், கழுதையையே ஒருவர் சுமந்து சென்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஒரு பஸ்ஸில் கழுதையை ஏற்ற, அதன் ஓனர் முயற்சிக்கிறார்..

ஏணி ஓனர்
பஸ்ஸுக்குள் கொண்டு செல்ல முடியாது என்பதால், பஸ்ஸுக்கு மேலே நிற்க வைத்து கொண்டு செல்ல அனுமதி கேட்டுள்ளார் போலும்.. குதிரையை தன் தோளின் மீது நிற்கவைத்து, அங்குள்ள ஏணி மீது ஓனர் ஏறுகிறார்.. ஏணி மேல் இவர் ஏறி, இவர் மீது குதிரை ஏறி கொண்டிருக்கிறது.. பின்னாடியே மற்றொரு நபர் உதவிக்கு செல்கிறார்.. அப்படியே ஏணியில் மெல்ல ஏறிச்சென்று, பஸ்ஸின் டாப்பில் குதிரையை இறக்கிவிடுகிறார்.. இந்த வீடியோவை பார்த்து இணையவாசிகள் குழம்பி விட்டனர். யார் மீது யார் ஏறி செல்வது என தெரியாமல் விழித்து கிடக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications