தமிழகத்தில் மலரும் தாமரை? திராவிட கட்சியை "ஓவர்டேக்" செய்த பாஜக? இதான் ட்விஸ்ட்! சபாஷ் அண்ணாமலை
சென்னை: தமிழக பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.. அதேசமயம், குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் தமிழக பாஜக பெற்றிருப்பதை மறுக்க முடியாது.
மிக மிக குறைவான வாக்கு வங்கியை வைத்திருந்தும்கூட, தனித்து போட்டியிட்டது பாஜக.. மலைபோன்ற திமுக, பெருத்த செல்வாக்குடன் இருந்தாலும், துணிச்சலுடன் அதனுடன் மோதியது தமிழக பாஜக.

தமிழிசை: நிச்சயம் பாஜக பல தொகுதிகளில் மண்ணை கவ்வும் என்று தெரிந்தாலும்கூட, வாக்கு வங்கியை வலுப்படுத்துவதில் பிரதான கவனத்தை தமிழக பாஜக செலுத்த துவங்கியது.. அந்தவகையில், சென்னையை எடுத்துக் கொண்டால், மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 2 தொகுதிகளிமே பாஜக 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த 2 தொகுதிகளிலுமே பிராமணர் சமூகத்தின் வாக்குகள், பிரதானமாக பாஜகவுக்கு சென்றிருக்கிறது.. கடந்த முறை தேர்தலில், மூத்த தலைவர் இல.கணேசன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்ததைபோலவே, இந்த முறை தமிழிசை சவுந்தரராஜனும், 2 லட்சத்து 90 ஆயிரத்து 300 வாக்குகளை பெற்றிருக்கிறார் என்றால், தொகுதி மக்களின் முடிவுகளில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை என்பதையே இந்த வாக்குகள் உணர்த்துகின்றன.
பாஜக: கடந்த 2019 தேர்தலில், அதிமுக 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 30.27 சதவீத ஓட்டுகளை பெற்றது... திமுக 23 இடங்களில் போட்டியிட்டு 32.76 சதவீத ஓட்டுகளை பெற்றது... பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு, 3.66 சதவீதம் பெற்றிருந்தது..
ஆனால், இந்த தேர்தலில், அதிமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது.. திமுக 22 இடங்களில் போட்டியிட்டு, 26.93 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. ஆனால், பாஜக 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. ஆக, பாஜக பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் குறைவு என்பதைவிட, திமுக, அதிமுக பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது என்பதையே இங்கு அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பெரிய கட்சி: அதுமட்டுமல்ல, மூத்த தலைவர் எச்.ராஜா சொல்வதுபோல், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் பாஜக உருவெடுத்திருக்கிறது.. ஒடிசா மட்டுமல்லாமல், தென் மாநிலங்களிலும் பாஜகவின் தடம் பதிய துவங்கியிருக்கிறது.. இதில், ஆந்திர மாநிலம் எதிர்பாராத திருப்பத்தை தந்தாலும், தெலுங்கானா, கர்நாடகாவிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைத்திருக்கிறது.
திராவிட கட்சிகளின் தோள் மீதே சவாரி செய்து பழக்கப்பட்ட பாஜக என்ற பெயரை, தற்போது உடைத்து நொறுக்கியிருக்கிறது தமிழக பாஜக.. திராவிட கட்சிகள் இல்லாமலேயே பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் துணிச்சலையும், அனுபவத்தையும், பயிற்சியையும் தற்போது தமிழக பாஜக பெற்றிருக்கிறது.
பிடிவாதம்: அதிமுகவுடன் கூட்டணி வைத்தே போட்டியிடுவோம் என்று மேலிட தலைவர்கள் பலமுறை சொல்லியும் அண்ணாமலை மட்டும் பிடிவாதமாகவே இருந்தாராம்.
"தனித்தே போட்டியிட்டால்தான் நம்முடைய பலம் என்னவென்று நமக்கு தெரியும்" என்று, கடந்த 1 வருட காலமாகவே மேலிட தலைவர்களிடம் எடுத்துரைத்தபடியே இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால், ரிஸ்க் எடுத்ததன் பலனை தமிழக பாஜக தற்போது அறுவடை செய்து வருகிறது.
12 இடங்களில் பாஜக கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.. திராவிட மண்ணில் தாமரை மலர போகிறதா என்று தெரியவில்லை.. ஆனால் அதற்கான முயற்சிகள் ஆழமாக வேரூன்றப்பட்டுள்ளதை இங்கு நாம் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications