ரீல்ஸ் போட்டது போதும்.. ரியலுக்கு வாங்க சாரே! தலைவிரித்தாடும் லஞ்சம்! வேதனையில் வாடும் விவசாயிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலையங்களில் லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் போட்டு வருகின்றனர் தவெகவினர். ஆனால் பண்ருட்டி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர். மூட்டைக்கு ரூ.50, வாட்ச்மேனுக்கு ரூ.500 லஞ்சம் கொடுத்தால்தான் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என்று பணிபுரியும் ஊழியர்கள் கண்டிஷன் போடுவதால், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் 15 நாட்கள் கடந்தும் நெல்மணிகள் கொள்முதல் செய்யாமல் இருப்பதால் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைந்து சேதமாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் வெற்றி பெற்றதில் இருந்து தமிழ்நாட்டில் லஞ்சமே இல்லை என ஒரு தரப்பு சொல்லி வருகிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சொல்லி வருகின்றனர்.

Panruti paddy procurement TNCSC

ஆனால் நிலைமை வேறு ஆகவே இருக்கிறது. உதாரணத்திற்கு நேரடியாக லஞ்சம் கேட்க பயப்படும் அதிகாரிகள் தங்கள் உதவியாளர்கள், உறவினர்கள் மூலம் லஞ்சம் பெற்று வருவதாக சொல்கின்றனர் பொதுமக்கள்.

நெல் கொள்முதல் நிலையம்

விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் நெல் கொள்முதல் நிலையங்களை இன்னும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்கின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமே இல்லை என அமைச்சர் எத்தனை முறை ரீல்ஸ் போட்டாலும் 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை' என்பது போல நெல் கொள்முதல் நிலையங்களில் இன்னும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என குற்றம் சாட்டுகிறார். உதாரணத்திற்கு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.

விவசாயிகள் புகார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பிஎன்.பாளையம் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை கொண்டு வந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்த நெல் மணிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடந்தும் எடை போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மழை சேதம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் நெல் மணிகள் மழையில் நனைந்து முளைந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் கொட்டப்பட்ட நெல்மணிகள் சுற்றிலும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் அறுவடை செய்த நெல்மணிகள் கொள்முதல் நிலையத்தில் கொட்டப்பட்டு கடந்த 15 நாட்களுக்கு மேலாக எடை போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

லஞ்சம்

நெல் எடை போடுவதற்கு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம், வாட்ச்மேனுக்கு ரூ.500 லஞ்சம் கொடுத்தால்தான் நெல் எடை போடுகின்றனர். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நெல் எடை போடாமல் கிடப்பில் போடுகின்றனர் என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டுவதற்கு சிமெண்ட் களம், நெல்மணிகளை பாதுகாக்க தார்ப்பாய், விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகளை 3 நாட்களுக்குள் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+