காய்கறி விலை உயர்ந்தும் பலன் இல்லையே.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விலைவாசி உயர்வு தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டுறவு மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் தக்காளி விலை ஒருபக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது என்றால் மற்றொரு பக்கம் சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. அதேபோல், பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து வருகிறது.

 Farmers are not benefiting from rise in prices of vegetables: TN Chief Minister MK Stalin

அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் குறிப்பிட்ட அளவே ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவதால் இதுவும் போதுமானதாக இல்லை. இந்த நிலையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். கூட்டுறவு மற்றும் வேளாண் துறை அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:-

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். காய்கறிகளின் விலை உயரந்தாலும் அதன் பலன் விவசாயிகளுக்கு நேரடியாக செல்லவில்லை. விவசாயிகளுக்கு நேரடியாக பலன் சென்று சேர வேளாண் துறை தனி கவனம் செலுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படுவதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல்களை மேற்கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+