கேஒய்சி நிரப்பாத பாஸ்டேக் இன்றுடன் காலாவதியாகிறதா? பரவும் தகவல்.. அதிகாரிகள் விளக்கம்
சென்னை: பாஸ்டேக் (FASTags) கேஒய்சியை அப்டேட் செய்வதற்கான காலக்கெடு பிப்ரவரி 29ம் தேதியான இன்று வரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேஒய்சி நிரப்பாத பாஸ்டேக் இன்றுடன் காலவதியாவதாக பரவிய தகவல்கள் குறித்து அதிகாரிகள் ஒன் இந்தியாவிற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
டோல்கேட்டில் சுங்கக் கட்டணத்தை முறைப்படுத்த விரும்பிய மத்திய அரசு , ஒரே வாகனம், ஒரே ஃபாஸ்ட் டேக் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், ஒரே ஃபாஸ்ட் டேக்கை பல வாகனங்களுக்கு பயன்படுத்துவது, ஒரே வாகனத்திற்கு பல ஃபாஸ்ட் டேக்கை பயன்படுத்துவது தவிர்க்க முடியும். இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தீவிரமாக செயல்படுத்தியுள்ளது..

இந்நிலையில் ' ஃபாஸ்ட் டேக் கணக்குகளில், KYC யை அப்டேட் செய்ய வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 29) நிறைவடைகிறது. இந்த சூழலில் உங்கள் பாஸ்டேக்கின் KYC விவரங்களை எவ்வாறு அப்டேட் செய்யலாம் என்பதை இப்போது நாம் பார்க்கலாம். இதுவரை KYC அப்டேட் செய்யாத வாகன ஓட்டிகள் KYC யை அப்டேட் செய்ய இந்த தகவல் நிச்சயம் உதவியாக இருக்கும்.
இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தின் (IHML) இணையதளத்தின்படி, இந்த விஷயங்களை படிப்படியாக பின்பற்றி உங்கள் KYC தகவலை நீங்கள் எளிதாக அப்டேட் செய்ய முடியும்.
ஸ்டெப் 1: நீங்கள் https://fastag.ihmcl.com என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு, கேஒய்சி அப்டேட் செய்வதற்காக பிரத்யேக இணைய லிங்க் வழியாக உள்ளே செல்ல வேண்டும் . அதன்பிறகு IHMCL வாடிக்கையாளர் தளத்தில் நீங்கள் லாகின் செய்ய வேண்டும். அதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு அல்லது OTP அடிப்படையிலான சரிபார்ப்பைப் பயன்படுத்தி உள்ளே செல்லுங்கள்.
ஸ்டெப் 2: டாஷ்போர்டு மெனுவில் மற்றும் டாஷ்போர்டின் இடது பக்க மெனுவில், "My Profile" என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள், அதில் "My Profile page என்ற பக்கம் தெரியும். அந்த My Profile page பக்கத்தில், நீங்கள் கேஒய்சி அப்டேட் பண்ணீட்டீங்களா இல்லையா என்பதை அறிய முடியும். உங்கள் KYC மற்றும் நீங்கள் உங்களை பற்றி சமர்ப்பித்த அனைத்து சுயவிவர விவரங்களும் காட்டும்.
ஸ்டெப் 3: அடுத்து நீங்கள் 'Profile' sub-sectionக்குள் போய் ''KYC' sub-section என்ற பிரிவைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: 'KYC' sub-section பிரிவில், "Customer Type" என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 5: உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முகவரியுடன் (முகவரிச் சான்றிதழின் படி) தேவையான அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் அனைத்து விவரங்களையும் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
ஸ்டெப் 6: KYC சரிபார்ப்பு செயல்முறையைத் தொடர, "அறிவிப்பு: இதில் இணைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் உண்மையான ஆவணங்கள் என்பதை நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். நான்/எங்களிடம் அசல் ஆவணங்கள் உள்ளன ( "Declaration: I/We confirm the attached documents are authentic documents. I/We have the originals with us") என்பதை நீங்கள் கட்டாயமாக டிக் செய்து சப்மிட் கொடுங்கள்.
இப்படி KYC அப்டேட் செய்தால், அதாவது உங்கள் கோரிக்கையை நீங்கள் இன்று செய்து முடித்தால் இன்றைய தேதியிலிருந்து அதிகபட்சம் ஏழு வேலை நாட்களுக்குள், உங்கள் KYC அப்டேட் ஆகிவிடும். உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்த பிறகு, வாடிக்கையாளர் போர்ட்டலின் "My Profile" பக்கத்தில் உங்கள் KYC அப்டேட் ஆகிவிட்டதா என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும்.
அதேநேரம் பாஸ்டேக்கில் KYC அப்டேட் ஆகவில்லை..ஏதே பிரச்சனை என்பதை எப்படி அறிவது?
IHML இணையதளத்தில் உங்கள் FASTag KYC அப்டேட் முழுமையடையாத நிலையில், இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் பதிவுசெய்துள்ள மொபைல் நம்பர் மற்றும் இமெயில் முகவரியில் இதை பார்க்கலாம்.
KYC ஐ ஆன்லைனில் அப்டேட்டை கீழ்கண்ட முறையில் சுருக்கமாக செய்யலாம்.
NHAI வழங்கிய FASTagக்கு https://fastag.ihmcl.com தளத்திற்கு போக வேண்டும். அதில் லாக் இன் செய்ய வேண்டும். . உள்நுழைக
KYC ஐ ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டும்.
வெவ்வேறு வங்கிகளால் வழங்கப்படும் FASTag க்கு - https://www.netc.org.in/request-fornetc-fastag என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
NETC FASTagக்கான கோரிக்கையின் கீழ், உங்கள் FASTag வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுத்து இணையதள இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அந்தந்த FASTag வழங்கும் வங்கியில் லாக் இன் செய்ய வேண்டும்,. அதன்பிறகு கேஒய்சியை அப்டேட் செய்யலாம்.
கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் பாஸ்டேக் காலாவதியாகிவிடுமா என்று நாம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டோம்.. அதற்கு பதில் அளித்த நெடுஞ்சாலை துறை அதிகாரி, 10000 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்கள் பாஸ்டேக் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும்.. மற்றவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கனரக வாகனங்களே 10000 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவை என்பதால் அந்த வாகனங்கள் தான் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் 10000 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியாது. 10000 ரூபாய்க்கு கீழ் ரீசார்ஜ் செய்யபவர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என்று கூறினார்.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்களும் 10000 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களே இதை பற்றி கவலைப்பட வேண்டும் என்று கூறினார்கள்.
பாஸ்டேக் கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால் என்னாகும்:10000 ரூபாய்க்குமேல் ரீசார்ஜ் செய்பவர்கள் பாஸ்டேக் கேஒய்சி அப்டேட் செய்யாவிட்டால், நீங்கள் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை கழிக்கும் வரை அதனை பயன்படுத்தலாம். அதன்பிறகு புதிதாக ரீசார்ஜ் அதில் செய்ய முடியாது. கேஒய்சி அப்டேட் செய்த பின்னரே 10000 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்ய முடியும். பாஸ்டேக் கேஒய்சி அப்டேட் என்பது ஏற்கனே பாஸ்டேக் வாங்கும் போது குறைந்தபட்ச ஆவணங்கள் கொடுத்து வாங்கி இருப்பீர்கள் அதை பயன்படுத்தி வருவோர், முழு தகவலை பதிவு செய்ய வேண்டும்.. அதுதான்..நடைமுறை
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications