Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபாகரன் இறந்தது உண்மை! எப்படி இறந்தார் தெரியுமா? 15 வருடம் ஆய்வு செய்த ஜெகத் கஸ்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது உலகமகா பொய் என்று ஜெகத் கஸ்பர் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வந்த போர் 2007 ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார்.

Father Jagat Kaspar says Prabhakaran is not alive

அவர் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை ராணுவத்தின் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தனர். இந்தப் போர் 2009 மே 18ல் முடிவுக்கு வந்தது.

குறிப்பாக இந்த போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் ஏராளமான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிக்கட்ட போரில் பிரபாகரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக அதிகாரப்பூர்வமான செய்தியை இலங்கை அரசு வெளியிட்டது.

ஆனாலும், அவர் இறந்ததற்காகச் சான்றுகளைச் சரியாக இலங்கை அரசு வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான் முள்ளிவாய்க்கால் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த 18 ஆம் தேதி உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் அனுசரிக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளைக் கடந்த பிறகு பிரபாகரன் மரணம் என்பது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.

ஒருசில தலைவர்கள் அவர் மீண்டும் வருவார், போராட்டத்தைத் தொடர்வார் எனச் சொல்லி மக்களை நம்ப வைத்துக்கொண்டே உள்ளனர்.

இந்நிலையில்தான் பிரபாகரன் உயிருடன் இல்லவே இல்லை என்று பேசி இருக்கிறார் ஜெகத் கஸ்பர். அவர் அளித்துள்ள இந்தத் தகவல் அனைத்து உண்மைக்கு எதிரானவை என்று கூறியுள்ளார்.

Father Jagat Kaspar says Prabhakaran is not alive

இது குறித்து ஜெகத் கஸ்பர், "போருக்குப் பிந்தைய தமிழர்களின் நிலை என்பது அவநம்பிக்கை தருவதாகவும் ஏமாற்றம் தருவதாகவுமே இருந்து வருகிறது. குறைந்தபட்ச அரசியல் தீர்வுகூட எட்டப்படவில்லை.

அரசாங்கத்தின் கணக்குப்படியே 1லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போய் உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் காணாமல் போகவில்லை. அழிக்கப்பட்டவர்கள்.

ஆனால், அரசாங்க கணக்கு என்பது ஒப்புக்குத்தான். நிச்சயம் 3 லட்சம் தமிழர்கள் இறந்து இருக்கக்கூடும். இது ஒரு இன அழித்தல். இதற்கான நீதி என்பது சர்வதேச அரங்கில் இன்னும் கொடுக்கப்படவில்லை.

உங்களை நீங்கள் வலுவாகக் கட்டமைத்துக் கொள்ளவில்லை என்றால், உலகம் உங்களைக் கண்டுகொள்ளாது. களத்திலிருந்த மக்கள் திகைத்துப் போய்விட்டார்கள். இயக்கம் ஆயுதப் போராட்டத்தை நிறுத்திவிட்டது. கட்டளை தலைமை என்பதும் சிதைந்து போய்விட்டது.

எனவே இன்னொரு ஆயுதப் போராட்டம் என்பது முன்னெடுக்க முடியாத சூழல் உள்ளது. அரசியல் போராட்டத்திற்கான இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளதைப் போல பொது அரசியல் என்பதும் சரியாக இல்லை. சிங்கள அரசை எதிர்க்கும் அளவுக்கு வலுவாக அது இல்லை.

தமிழர்களின் பகுதிகள் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரு தமிழருக்குப் பல ராணுவ வீரர்கள் என்ற அளவில் எண்ணிக்கை அங்கே உள்ளது. இலங்கை, இந்திய உளவு அமைப்புகள் வெற்றிபெற்றுள்ளன.

ஆகவே, இதுவரை செயல்பட்டு வந்த எந்த அமைப்பையும் ஈழத்தமிழ் மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. இதனால் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது. ஆகவே, உலக ஜனநாயக ஒழுங்குக்கு உட்பட்டு மக்கள் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.

ஆயுத போராட்டத்தைக் கடைசி நேரத்தில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றுதான் பிரபாகரன் எண்ணி இருந்தார் என்பது எனது கணிப்பு. அவருக்குப் பின்னால், அவர் விட்டுச் சென்ற தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்துக் கொண்டு போக உலகத் தமிழர்கள் அனைவருமே தவறிவிட்டோம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களைக் கைவிட்டு விட்டன. அதற்குக் காரணம் நாம் தமிழர் கட்சி. இந்தக் கட்சிக்கும் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது.

Father Jagat Kaspar says Prabhakaran is not alive

இந்த இயக்கத்தின் கரு தமிழ் உணர்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. நாம் தமிழர் இயக்கம் தேவைக்கான முதல் அடி என்னால் எடுத்து வைக்கப்பட்டது. அதற்குப் பின் அதற்குள் உளவுத்துறை புகுந்து சீமானைக் கொண்டுவந்தது.

அவர் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு, அதன் கொள்ளைகளை நீர்த்துப் போக வைத்துவிட்டார். இவரால் தமிழ்நாட்டில் பல கட்சிகள் ஈழத்தமிழர் பிரச்சினையைப் பேசுவதையே நிறுத்திக் கொண்டன.

துவாரகா மரணமடைந்தது உண்மை. அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் ஓயாத அலைகள் போர்க்களத்திலேயே மிகக் கடுமையாகச் சண்டை செய்தவர். இறுதியில் முள்ளிவாய்க்கால் போரில் அவர் மரணமடைந்தது உண்மை.

ஆனால், அவர் உயிருடன் இருப்பதாக சில பொய்யான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எல்லாம் இழிபிறவிகள்.

2024 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவு நாளில் ஒரு உண்மையை உலகத் தமிழர்களுக்கு உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். ஏறக்குறைய இந்தப் போராட்டத்துடன் 30 ஆண்டுகள் பயணப்பட்டவன் நான்.

ஆகவே சொல்கிறேன். வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் வீர மரணம் அடைந்துவிட்டார் என்பதே உண்மை. மீண்டும் அவரது தலைமையில் ஒரு போராட்டம் நடைபெறப்போவதில்லை. அதற்காக வாய்ப்புகளும் இல்லை.

அவருக்குப் போரின் போது 3 கருத்துகள் இருந்தன. ஒன்று, வேறொரு காட்டுக்குள்ளாகவோ அல்லது நாட்டுக்கோ தப்பிச் செல்வதற்கான கருத்து இருந்தது.

இரண்டாவது, பிரபாகரனுக்குத் தெரியாமலே சிங்கள ராணுவம் அவரைச் சுற்றி வளைத்துச் சுட்டுக் கொன்று இருக்கலாம் என்பது. மூன்றாவது, அவரே தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது.

இந்த மூன்றில் கடைசி கருத்துதான் உண்மை. இன்றைக்கு அவருடன் இறுதிக் கட்ட போரிலிருந்தவர்கள் யாரும் உயிருடன் இல்லை. ஆகவே சாட்சியம் என்பது கிடைக்கப் போவதே இல்லை.

ஆனால், அவர் தனது கைத்துப்பாக்கி மூலம் வாய்க்குள் சுட்டுக் கொண்டு இறந்தார் என்பதே உண்மை. அதை இந்த 15 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகுதான் நான் சொல்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+