சென்னையில் விஷவாயு தாக்கி தந்தை மகன் பரிதாபமாக உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை யானைகவுனியில் கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் உயிரிழந்தனர். 45 அடி ஆழமுடைய கிணற்றில் இறங்கிய கொடுங்கையூரைச் சேர்ந்த அய்யனார், அவரது தந்தை ரவி ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை யானை கவுனி பொன்னப்பன் சந்து பகுதியில் 45 அடி ஆழமுள்ள கிணற்றை தூர்வார இறங்கிய கொடுங்கையூரை சேர்ந்த அய்யனார், அவரது தந்தை ரவி இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். உரிய பாதுகாப்பு இல்லாமல் கிணற்றை தூர்வார ஆட்களை பணியமர்த்திய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
