"FCRA திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்".. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கடந்த மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட FCRA திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். மசோதாவின் தொலைநோக்கு பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நடப்பு கூட்டத்தொடரிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட FCRA Bill எனப்படும் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

FCRA Amendment Bill

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்ற, திமுக எம்.பி வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், ஆகஸ்ட் 6 ஆம் தேதியில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.

மக்களவையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) 2026-ஐத் திரும்பப் பெறவும், எஃப்சிஆர்ஏ சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்கவும் அல்லது அதற்கு மாற்றாக, இச்சட்ட முன்வரைவையும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும் உள்துறை அமைச்சரிடம் வில்சன் எம்.பி தலைமையிலான குழுவினர் வலியுறுத்தினர்.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்ட முன்வரைவின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில்கொண்டு, அதன் விதிகளைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+