பிப்ரவரி மாத ராசி பலன் 2022: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கனவுகள் நனவாகும்
பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் பார்வை ஆகியவற்றைப் பொறுத்து மேஷ ராசிக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: பிப்ரவரி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களும் யோகங்களும் கை கூடி வரப்போகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சூரியன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் சஞ்சரிக்கப்போகிறார். இந்த மாதத்தில் சூரியன்,செவ்வாய்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
மகர ராசியில் உள்ள சனி, சூரியன், புதன் கூட்டணி மாத பிற்பகுதியில் பிரியப்போகிறது. பிப்ரவரி 13ஆம் மகர ராசியில் உள்ள சூரியன் கும்ப ராசிக்கு சென்று குருவோடு இணையப் போகிறார். தனுசு ராசியில் உள்ள செவ்வாய், சுக்கிரன் மாத இறுதியில் இடப்பெயர்ச்சியாகி மகர ராசியில் உள்ள சனியோடு இணையப் போகிறார்.
நவகிரகங்களின் பயண பார்வையைப் பார்த்தால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் செவ்வாய் தனுசு ராசியில் 9ம் வீட்டில் இணைந்துள்ளார். மாத இறுதியில் பத்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார் செவ்வாய் உச்சம் பெற்று சனியோடு இணையப் போகிறார். குரு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் சூரியன், சனி, புதன் இணைந்துள்ளனர். ராகு இரண்டாம் வீட்டிலும் கேது எட்டாம் வீட்டிலும் அமர்ந்துள்ளனர்.

பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும்
மேஷ ராசிக்காரர்களுக்கு இது பாசிட்டிவ் ஆன மாதமாக உள்ளது. சூரியனின் பயணம் சாதகமாக உள்ளது. திருமணம் ஆகி புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது நல்ல மாதம். நல்ல செய்தி தேடி வரும். ஒன்பதாம் வீட்டில் ராசிநாதன் நிலை நன்றாக உள்ளது. செவ்வாயின் பார்வை பலம் நன்றாக உள்ளது. 12வது வீடு, 3வது, 4வது வீட்டின் மீது செவ்வாய் பார்வை விழுகிறது. சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சூரியனின் பார்வையும் நான்காம் வீட்டின் மீது விழுகிறது. பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்கள், பிள்ளைகள் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

புது வீடு, வாகனம் வாங்கும் யோகம்
பத்தால் வீட்டில் சனி பலமாக இருக்கிறார். தொழில் வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். குரு மங்கல யோகம் தேடி வரப்போகிறது. தைரிய ஸ்தானத்தில் குருவின் பார்வையும் செவ்வாய் பார்வையும் இணைந்துள்ளதால் கனவுகள் நனவாகும் காலம் கை கூடி வரப்போகிறது. வீடு கட்டும் யோகம் வரப்போகிறது. இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து செய்யலாம். வீடு கட்டியவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் கூடி வரப்போகிறது.

திருமணம் கை கூடும்
சூரியன் மாத பிற்பகுதியில் இடப்பெயர்ச்சியாகி குரு உடன் இணையப் போகிறார். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். யோகமான நிலையில் சுக்கிரனும் செவ்வாயும் பயணம் செய்கின்றனர். திருமண சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். எந்த விசயத்தையும் யாரிடத்திலும் வெளியில் வெளிப்படையாக சொல்லாதீர்கள். கெட்டி மேளம் கொட்டப்போகும் காலம் வந்து விட்டது. பிரிந்த தம்பதிகள் ஒன்றாகும் காலம் கை கூடி வரப்போகிறது.

வீண் வாக்குவாதம் வேண்டாம்
மாத பிற்பகுதியில் சூரியன் குருவோடு இணைந்திருக்கும் காலத்தில் பதவி யோகங்கள் முன்னேற்றங்கள் வரலாம். நாவடக்கம் வரலாம். உங்களுடைய வாயே உங்களுக்கு எதிரி எனவே நாவடக்கம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். ராகு குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்களைத் தரலாம். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். உங்களின் தசாபுத்தி சரியாக இருக்கும் பட்சத்தில் தடைகள் நீங்கி நல்ல சம்பவங்கள் அதிகம் நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications