விசைத்தறி தொழிலாளியின் மகள் வங்கி தேர்வில் தேர்ச்சி.. நானே ஜெயித்ததுபோல இருக்கிறது! நெகிழ்ந்த ஸ்டாலின்
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பணிக்கு கட்டணம் இன்றி இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து வந்த விசைத்தறி தொழிலாளியின் மகள் வங்கி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது தொடர்பான செய்தி வெளியான நிலையில், "நானே ஜெயித்தது போல் உள்ளது" என முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலி. இவரது தந்தை நெசவுத் தொழிலாளியாக உள்ளார். சிறு வயதில் இருந்தே வங்கி அதிகாரியாக வேண்டும் என்ற கனவுடன் இருந்த கமலிக்கு பயிற்சி வகுப்பு சென்று படிக்கும் அளவிற்கு போதிய பொருளாதார சூழல் இல்லை.

நான் முதல்வன் திட்டம்
எப்பாடுபட்டாவது படித்து தனது லட்சியத்தை எட்டிவிட வேண்டும் என்று இருந்த கமலிக்கு தமிழக அரசின் நான் முதலவன் திட்டம் பற்றி தெரியவந்தது. ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் "நான் முதல்வன் திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்த கமலி, அங்கேயே தங்கி படித்து வந்தார். ஸ்டேட் வங்கியில் probationary officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது.
ஆனந்தத்தில் துள்ளி குதித்த மாணவி
இந்த தேர்வுக்கு விண்ண்ப்பித்து இருந்த கமலி, நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து தீவிரமாக தேர்வுக்கு தயாரானர். கமலிக்கு முதல் முயற்சியிலேயே வங்கியில் வேலை கிடைத்தது. ரிசல்ட்டை பார்த்த கமலி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். தனது தந்தையிடம் வங்கி தேர்வில் வெற்றி பெற்றது குறித்து சொல்லி ஆனந்தத்தை பரிமாறிக் கொள்ளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வந்தது.
முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி
ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நான் முதல்வன் திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்று நெகிழ்ச்சியுடன் கமலி கூறினார். இந்த நிலையில், மாணவி கமலி பற்றி செய்தியை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியடைந்துள்ளார். கமலியின் வெற்றி குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "நானே ஜெயித்தது போல உள்ளது" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications